வெறும் 7 நாட்களில், இந்த 3 பொருட்களை வைத்து, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், முகத்தை பளபளப்பாக மாற்றிவிடலாம். கிளாஸி ஸ்கின் பெற இனி எந்த கஷ்டமும் இல்லை.

face2

எல்லோருக்குமே நம்முடைய முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். கிளாஸி லுக் கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்படி பளபளப்பான முகத்தைப் பெற நிறைய வழிகள் இருக்கின்றது. நமக்கு செலவும் ஆகக்கூடாது. அதேசமயம் நம்மை நாம் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்ப ரொம்ப உபயோகமானதாக இருக்கும். செலவே இல்லாம உங்க முகத்தை அழகாக மாற்றிக்கொள்ள வீட்ல இருக்கிற 3 பொருள் மட்டுமே போதும்.

rice-flour

அந்த மூன்று பொருள் என்ன? காய்ச்சாத பச்சை பால், தக்காளி பழ சாரு, அரிசி மாவு, அவ்வளவு தான். முதலில் ஒரு காட்டன் பஞ்சு எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சாத பாலை ஒரு ஸ்பூன் அளவு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பஞ்சை காய்ச்சாத பாலில் முதலில் நனைத்து உங்களுடைய முகத்தை நன்றாகத் துடைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு சாதாரண தண்ணீரை ஊற்றி முகத்தைக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும், ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அரிசி மாவு, (நைசாக அரைத்த அரிசி மாவு) எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு காய்ச்சிய அல்லது காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை பேஸ்ட் போல் இருந்தால் போதும்.

milk1

இதை தொட்டு உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து, சரியாக ஐந்து நிமிடங்கள் ஸ்கரப் செய்து மசாஜ் செய்ய வேண்டும். கன்னம், நெற்றி, தாடை பகுதி, என்று எல்லா இடங்களிலும் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு இந்த பேக்கை கழுவி எடுத்து விடுங்கள். உங்களுடைய முகம் பாதி அளவு பொலிவாகி விடும்.

மீண்டும் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி மாவு 2 ஸ்பூன், தக்காளி பழச்சாறு ஊற்றி இதை பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் பால் எதுவுமே ஊற்ற கூடாது. தக்காளியை அரைத்து அரிசி மாவோடு கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொண்டாலும் சரிதான். இதை உங்களுடைய முகத்தில் அப்படியே பேக் போட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

face1

இறுதியாக உங்களால் முடிந்தால் ஐஸ் கியூபை கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்து கொடுத்து விட்டு, அதன் பின்பு பாருங்கள் உங்களுடைய முகம் எப்படி பள பளப்பாக ஜொலிக்கிறது என்று! செலவு என்று பார்த்தால் 5 ரூபாய் கூட கிடையாது. ஆனால் ரிசல்ட் பல ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி ஃபேசியல் பண்ணது போலவே உங்களது முகம் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.