தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கையில் பணம் சரளமாக புரள, பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு 1 பொருளை மட்டும் வைத்தால் போதும்.

business-viyabaram

சில பொருட்கள் நாம் தனித்தனியாக வைப்பதைவிட ஒன்றாக சேர்ப்பதன் மூலம் மாபெரும் சக்திகளை பெற முடியும். இவை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ரகசிய வழிமுறைகளாக உள்ளன. அந்தக் காலத்தில் எல்லாம் தொழில் செய்யும் இடங்களில், அல்லது வியாபாரம் செய்யும் தளங்களில் கொம்பு போன்று ஒரு அமைப்பை உருவாக்கி நட்டு வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் நுழையும் பொழுது அதுதான் அனைவரின் கண்களிலும் முதலாவதாக தெரியும்படி வைக்கப்பட்டிருக்கும். அதில் பணத்தை ஈர்ப்பதற்கும், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை கூட்டுவதற்கும் சில பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள். அதேபோன்ற வழிமுறையை பயன்படுத்தி தான். நாம் இப்போது இந்த செயல்முறையை கையாளப் போகிறோம். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

business-shop

எந்த ஒரு தொழில் துவங்குவதானாலும், வியாபாரம் செய்ய யோசனை செய்வதானாலும் சரி அதில் முதலில் நமக்கு நினைத்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை. போட்ட முதலை எடுப்பதற்கே பல காலம் சென்று விடும். எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் கடை வாடகைக்கு சரியாக இருக்குமே தவிர, நாம் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டிருக்கும். பத்தில் எட்டு பேருக்கு நிச்சயம் இந்த பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடையைத் திறந்து விடுவது அந்த அளவிற்கு நல்ல பலன்களைத் தரும். கடையை திறந்ததும் சுத்தம் செய்துவிட்டு, கடை முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளிக்க வேண்டும். நிச்சயம் சாமி படத்திற்கு பூ சாற்றி, விளக்கேற்றி, தூப தீபம் காண்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வருவதற்குள் இந்த நடைமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தொடங்கியிருக்கும் தொழிலானது நல்ல முறையில் நடைபெறும்.

deepam

நீங்கள் பணம் வைக்கும் கல்லாப்பெட்டியில் வாசனை மிகுந்த திரவியங்கள் வைத்திருக்கலாம். பச்சை கற்பூரம் சிறிது போட்டு வைக்கலாம். இவையெல்லாம் உங்கள் கடையில் தெய்வீக சத்தி ஊடுருவ காரணமாக இருக்கும். சுயதொழில் புரிபவர்கள் எப்போதும் சோம்பேறி தனத்துடன் இருக்கவே கூடாது. இரும்பைப் போல் உடலையும், எறும்பைப்போல் சுறுசுறுப்பையும் கொண்டிருக்க. வேண்டும். வேப்ப மரக்குச்சியை தோல் சீவி ஒரு அடிக்கு நீளமாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சதுரமாக வெட்டிய வெள்ளை காட்டன் துணியை எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் 11 கொட்டைப்பாக்கு, அனுமனுக்கு உகந்த செந்தூரம், குங்குமம், கோரோசனை, அரகஜா இவை நான்கையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். இந்த ஐந்து பொருட்களும் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்களாக இருப்பதால் வியாபாரத்திற்கு மிகவும் நன்மை செய்பவையாக இருக்கும். தொழில் விருத்தி அடைவதற்கும், உங்களுக்கு உரிய பணத்தை ஈர்ப்பதற்கும் பெரிய அளவில் துணை புரியும். அனைத்தையும் ஒன்றாக்கி வேப்பங்குச்சி உடன் சேர்த்து நன்றாக மஞ்சள் நூல்கொண்டு கட்டிவிட வேண்டும்.

veppa-mara-kuchi

இதை மக்கள் பார்க்கும் வண்ணம் உங்களது பணப் பெட்டிக்கு அருகே சொருகி வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அன்றாடம் தூபம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் கையில் சரளமாக பணம் புரளும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் நிச்சயம் கிட்டும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் விருத்தி அடையும். நம்பிக்கையுடன் ஒரு முறை முயன்று பார்த்து பலன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
பலவிதமான பணப் பிரச்சினைகளையும், தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருளுக்கு உண்டு. இப்படி செஞ்சா, உங்க கைக்கு பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Viyabaram peruga tips in Tamil. Viyabaram peruga pariharam Tamil. Viyabaram sirakka Tamil. Thozhil valarchi pariharam Tamil. Viyabaram peruga Tamil.