படிப்புக்கேற்ற வேலை கிடைக்க ராஜராஜேஸ்வரி வழிபாடு

amnan maavilakku
- Advertisement -

ஒருவர் செய்யும் தொழிலும் அவர் செய்யும் வேலையுமே அவருக்கு அடையாளமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வேலை அல்லது தொழில் இவை இரண்டுமே அவர்களின் விருப்பப்படி இருந்தால்தான் அதில் அவர்களால் சிறந்து விளங்க முடியும். என்னதான் கஷ்டப்பட்டு படித்து, இப்படியாக வேண்டும் என்று நினைத்தாலும் காலப்போக்கில் அவர்களின் கனவுகள் அனைத்தும் கனவாகவே சென்று விட்டு கிடைக்கின்ற வேலையில் வேண்டா விருப்பமாக செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ சிறப்பாக தொழிலை செய்து கொண்டு இருப்பார்கள் திடீரென்று ஏதோ ஒரு பிரச்சினையில் ஒரு சரிவு ஏற்படும். அந்த சரிவிலிருந்து தொடர்ந்து சரிவாகவே கண்டு தொழிலே ஸ்தம்பித்து விடும். அப்படிப்பட்டவர்களும் தங்களுடைய தொழில் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு

இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த வேலைக்குரிய படிப்பை படித்திருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த வேலையை செய்யாமல் கிடைக்கின்ற வேலையை செய்து கொண்டு இருப்பவர்களும் அந்த வேலையில் சேர்ந்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும் ஒரு புறம் இருக்க, தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை திரும்பவும் லாபமாக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் ஒரு புறம் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய தெய்வம் தான் ராஜராஜேஸ்வரி அம்மன்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நம் வீட்டில் கண்டிப்பான முறையில் ராஜராஜேஸ்வரி அம்மனின் படம் இருக்க வேண்டும். தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய ராஜராஜேஸ்வரி அம்மன் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மல்லிகை பூ மாலை போட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக வாசனை மிகுந்த உதிரிப் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். இதை அகல் விளக்கில் ஏற்றக்கூடாது. மா விளக்காக ஏற்ற வேண்டும். தினமும் ஏற்ற வேண்டும். சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தினமும் ஏற்றுங்கள். இவ்வாறு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த உதிரிப்பூக்களை வைத்து “ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி போற்றி” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்யுங்கள்.

வாசனை மிகுந்த மலர்கள் கிடைக்காத பட்சத்தில் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ராஜராஜேஸ்வரி அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் வேலை தொடர்பான தொழில் தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
இந்த வழிபாட்டை கணவனுக்காக மனைவியும், குழந்தைகளுக்காக தாயும் தந்தையும் செய்யலாம். உடன் பிறந்தவர்களுக்காகவும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:அனைத்து நன்மைகளும் ஏற்பட வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

முழு மனதோடு ராஜராஜேஸ்வரி அம்மனின் திருப்பாதங்களில் சரணாகதி அணிந்து அடைந்து தினமும் அந்த அம்மனின் நாமத்தை கூறி இந்த முறையில் வழிபாடு செய்ய விரைவிலேயே அவர்களின் தொழில் மற்றும் வேலை தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -