- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilநீளமான, கருமையான கூந்தலை பெற

நீளமான, கருமையான கூந்தலை பெற

- Advertisement -

அழகை மேம்படுத்துவதற்காக எவ்வளவு முயற்சிகளை நாம் செய்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே நம்முடைய அழகும் இருக்கும். எந்த அளவுக்கு நம்முடைய உடலை ஆரோக்கியமாக நாம் பார்த்துக் கொள்கிறோமோ அதே அளவிற்கு தான் நம்முடைய அழகும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் உணவையே மருந்தாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் நம்முடைய தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு தினமும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருட்களை பற்றி இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நீளமான, கருமையான கூந்தலை பெற

பலரும் தங்களுடைய தலை முடி தொடர்பான பிரச்சினையில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். தலைமுடி பிரச்சனை என்றதும் நம் நினைவிற்கு வருவது முடி உதிர்தல் அதேபோல் இளநரை பிரச்சினை. இவை இரண்டும்தான் அதிகப்படியான நபர்களுக்கு வருத்தத்தை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இவை இரண்டையும் நீக்குவதற்கு வெளிப்பூச்சாக பல மருந்துகள் இருந்தாலும் உட்புறமாக எடுத்துக் கொள்வதற்கும் உட்புறத்திலிருந்து அதை சரி செய்வதற்கும் என்னென்ன உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக ஒருவருக்கு நரை முடி பிரச்சனை என்பது வருகிறது என்றால் அது அவர்களுடைய வயது மூப்பின் காரணமாகத்தான் வரவேண்டும். வயது மூப்பின் காரணமாக வராமல் இளம் வயதிலேயே நரை முடி வந்து விட்டால் அதற்கு இளநரை என்று கூறுவார்கள். இந்த இளநரை பிரச்சினை வருவதற்கு முக்கியமான காரணம் உடலின் இருக்கக்கூடிய உஷ்ணம் தான். இந்த உஷ்ணத்தை நாம் குறைத்தாலேயே நம்முடைய நரை முடி பிரச்சனை என்பது குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அந்த உஷ்ணத்தை குறைப்பதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். அதோடு மதிய நேரத்தில் ஒரு சிறிய கப்பில் பசுந்தயிரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பசு நெய்யை கலந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். அதன் மூலம் இளநரை பிரச்சினை என்பது படிப்படியாக குறையும். மேலும் முடி உதிர்தலும் குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதே போல் முடி நீளமாக வளரவில்லை முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறுபவர்கள் தினமும் காலையில் கருவேப்பிலையை ஜூஸாக அரைத்து சாப்பிட வேண்டும் இதோடு தங்களுக்கு வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை கிடைக்கும் பட்சத்தில் அதையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்தல் என்பது படிப்படியாக குறைந்து முடி வளர ஆரம்பிக்கும். இளநரை பிரச்சினையும் குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:முகத்தில் இருக்கும் பூனை முடியை நீக்க
உடல் உள்ளுறுப்புகளின் பிரச்சினையின் வெளிப்பாடு தான் வெளித்தோற்றத்தின் காரணமாக திகழ்கிறது என்பதால் இளநரை மற்றும் முடி உதிர்தலுக்கு காரணமான பிரச்சனைகளை தீர்த்தால் போதும், நம்முடைய அழகு தொடர்பான பிரச்சினையும் தீர்ந்து விடும். அழகை மேம்படுத்துவதற்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்