பொருளாதார முன்னேற்றம் ஏற்பட சுக்கிர வழிபாடு

sukiran dheepam
- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். ஒரு கிரகம் நம்முடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அதனால் நமக்கு நன்மைகளும் தீய நிலையில் இருந்தால் அதனால் நமக்கு தீமைகளும் உண்டாகும். இதே போல் ஒரு கிரகம் எந்த இடத்தில் இருந்தால் நன்மைகள் உண்டாகும் எந்த இடத்தில் இருந்தால் தீமைகள் உண்டாகும். இப்படி இருக்கும் ஒவ்வொரு நிலைக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கையின் நிலை என்பதும் மாறும். நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் சுக்கிர பகவானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம்
பார்க்க போகிறோம்.

சுக்கிர பகவான் வழிபாடு முறை

ஒருவருடைய வாழ்க்கையில் சுக்கிர பகவானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அவருடைய பொருளாதாரத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது. அடுத்த கட்ட நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டே செல்ல முடியும். இதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையுடனும் வாழ முடியும். இவை அனைத்தையும் பெறுவதோடு சுக்கிர பகவானின் அருளையும் பெறுவதற்கு செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய சுக்கிர பகவானுக்குரிய நட்சத்திரமாக திகழ்வது பரணி, பூரம், பூராடம். இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாள் அன்று நாம் வருமானத்தை பெருக்குவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் சுக்கிர பகவானைக்குரியக் கிழமையான வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது அவருடைய நாமத்தை உச்சரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு பிறகு இந்த பணரீதியான பிரச்சினைகளை சரி செய்வதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடையும்.

இதே போல் ஒவ்வொரு நாளிலும் வரக்கூடிய சுக்கிர கூரையிலும் நாம் மேற்கொள்ளலாம். இதே போல் சுக்கிர பகவான் இருக்கும் இடத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் மேஷம், கடகம், கன்னி, தனுசு, மகரம் போன்ற லக்னம் வரும் நாட்களிலும் நாம் பண ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையும்.

- Advertisement -

லக்னம் பார்த்து நட்சத்திரம் பார்த்து நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அந்த செயலால் நமக்கு நன்மைகளை உண்டாக்கும். இருப்பினும் இந்த செயல்களை மேற்கொள்ளும் அன்றைய தினம் நம்முடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. இவை அனைத்தும் வழிமுறைகளாகவே கருதப்படுகிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றும் பணவரவு அதிகரிக்கும் என்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து 90 நாட்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவதன் மூலமும் சுக்கிர பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷம் நீங்க மந்திரம்

வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்ச்சொன்ன நட்சத்திர நாளிலோ, கிழமையிலோ, லக்னத்திலோ ஆரம்பித்து நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை பெறலாம்.

- Advertisement -