தோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த 15 ஆண்டுகள் இவர்தான் டாப் – கில்கிறிஸ்ட்

gilchrist

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 14ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். இவர் ஐ.சி.சி நடத்திய அனைத்து உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே கேப்டனும் இவர்தான் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 2007 – டி20 உலகக்கோப்பை, 2011 – 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2015 – சாம்பியன்ஸ் டிராபி போன்றவைகளை இந்திய அணிக்காக பெற்று தந்துள்ளார்.

தோனியின் பேட்டிங் மட்டுமின்றி அவரது விக்கெட் கீப்பிங் திறனையும் நாம் பார்த்திருக்கிறோம். மின்னல் வேக ஸ்டம்பிங், ஒற்றை கையால் த்ரோ , தனது சமயோஜித திறனை உபயோகித்து ரன் அவுட் செய்வது என பல டெக்னிக்களை தன்வசம் வைத்துள்ளார் தோனி. எனவே, தான் இந்தியா அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் இந்திய அணியின் இளம் விக்கெட்கீப்பரான ரிஷப் பண்டிற்கு தனது அறிவுரையினை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பிங் லெஜெண்ட் கில்கிறிஸ்ட். அதில் அவர் கூறியதாவது : பண்ட் உங்களிடம் அபாரமான திறமை உள்ளது. பேட்டிங்கில் உங்களுடைய திறமையினை வெகு விரைவாக வெளிக்காட்டி சிறந்த வீரராக மாறி இருக்கிறீர்கள்.

pant

ஆனால், விக்கெட் கீப்பிங்கில் நீங்கள் தோனியிடம் இருந்து நிறைய டெக்னிக்களை கற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய மின்னல் வேக ஸ்டம்பிங், ஒற்றை கையால் த்ரோ , தனது சமயோஜித திறனை உபயோகித்து ரன் அவுட் செய்வது மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீசும் இடத்தினை கூறுவது என நிறைய திறமைகள் தோனியிடம் உள்ளது. அதனை நீங்கள் தோனியிடம் இருந்து முறைப்படி கற்றுக்கொண்டீர்கள் என்றால் தோனிக்கு அடுத்து இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் நீங்கள் தான் பண்ட். அடுத்த 15 வருடம் உங்கள் ராஜ்ஜியம் தான் என்று பண்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளார் கில்கிறிஸ்ட்.

இதையும் படிக்கலாமே :

என்னை பொறுத்தவரை சஹால், குலதீப் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதில் மீண்டும் இவர் இந்திய ஒருநாள் அணியில் ஆடவேண்டும் – சேவாக்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்