10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உங்க வீட்ல இஞ்சி இருக்கா? ஆந்திரா ஸ்டைல் இஞ்சி துவையல் ஒருவாட்டி மணக்க மணக்க இப்படி செஞ்சு பாருங்க.

ginjer-chutney1

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இஞ்சியை வைத்து ஒரு துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னியை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாது. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால், அதை விட ருசி அதிகமாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் கூட, சாப்பாடு மொத்தமும் காலியாகிவிடும். சரி ஆந்திரா ஸ்டைல காரசாரமா இஞ்சி துவையல் எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.

ginjer1

முதலில் இஞ்சியை நன்றாக தோல் சீவி கழுவி கொஞ்சம் பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்து இஞ்சி – 15 கிராம் அளவு இருந்தால் போதும். ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து 1/4 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக கடாயில் அடுப்பை வைத்து அதில் நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி நன்றாக காய வேண்டும். அதன் பின்பு கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 3 போட்டு, இந்த மூன்று பொருட்களும் சிவக்கும் போது இஞ்சியை சேர்க்க வேண்டும். இந்த இஞ்சி பச்சை வாடை போகும் வரை நன்றாக வதங்கிய பின்பு, இறுதியாக 1 ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஜீரகம் கருகி விடக்கூடாது.

ginjer2

இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் 80 சதவிகிதம் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொறகொறவென்று அரைத்தால் தான் துவையல் சுவையாக இருக்கும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து, 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து, கரைத்து வைத்த புளியை கடாயில் ஊற்றி விடுங்கள். இதோடு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பை சேர்த்து, புளி தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். இரண்டு நிமிடம் தண்ணீர் தளதளவென கொதித்து வந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடியை புளி தண்ணீரோடு சேர்த்து கரண்டியால் கலக்கி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.

ginjer3

இது ஐந்து நிமிடங்களில் சுண்டி துவையல் பதத்திற்கு வந்துவிடும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை சிவக்க விடுங்கள். அதன்பின்பு அடுப்பை விட்டு இறக்கி, நன்றாக ஆறவிட்டு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 10 நாட்கள் வரைகூட கெட்டுப்போகாது.

ginjer-chutney

இதில் நீங்கள் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சட்னிக்கு எண்ணெய் உப்பு காரம் எல்லாம் ஒரு படி அதிகமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்ல நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
தினமும் இதை மட்டும் சாப்பிட்டாலே போதும். 7 நாட்களில் உங்கள் முடி தாறுமாறா வளர ஆரம்மிச்சிடும். நீங்களே நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.