கொடு என்றால் இறைவன் கொடுப்பதும் இல்லை.. வேண்டாம் என்றால் விடுவதுமில்லை.

mahalakshmi-1

அந்த மஹாலக்ஷ்மியின் பார்வையானது நம்மேல் பட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இங்கு ஒருவருக்கு மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டும் கூட இவருக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன என்பதை ஒரு சிறிய கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம்.

Varalakshmi

நாம் எல்லோரும் அறிந்த விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட காரணமாக இருந்தவர் சன்யாசியான வித்யாரண்யர். இவரைப் பற்றிய கதைதான் இது.

வித்யாரண்யர் ஒரு பரம ஏழையாக இருந்தவர். பொதுவாக மனிதன் எல்லாவற்றையும் துறப்பதற்காக தான் சன்னியாச வாழ்க்கையை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இவர் செல்வங்களை பெறுவதற்காக சன்யாச வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்.

Kurangu samiyar

தன் ஏழ்மையை போக்கி கொள்வதற்காக அந்த மஹாலக்ஷ்மியை வேண்டி கடுமையான தவம் இருந்தவர் வித்யாரண்யர். கடும் தவத்திற்கு மனமிரங்கிய அந்த மஹாலக்ஷ்மி வித்யாரண்யருக்கு காட்சியளித்தாள். ‘கடுமையான பண கஷ்டத்தில் இருக்கும் என் மேல் மஹாலக்ஷ்மியான உன் பார்வையானது சிறிது நேரம் விழுந்தால் என் வாழ்க்கையின் வறுமை நீங்கும்.’ என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார் வித்யாரண்யர். மஹாலக்ஷ்மியின் பார்வையானது இவர் மீது பட்டுவிட்டால் செல்வசெழிப்பு வந்துவிடும் அல்லவா அதற்காகத்தான்.

- Advertisement -

ஆனால் மஹாலக்ஷ்மியோ ‘இந்த ஜென்மத்தில் உனக்கு வறுமையான வாழ்க்கை தான். உன் தலையெழுத்தை என்னால் மாற்ற முடியாது. அடுத்த ஜென்மத்தில் உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். வேறு ஏதாவது  வரம் கேள்’ என்று கூறிவிட்டார்கள். அதிர்ச்சி அடைந்த வித்யாரண்யர் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் யோசனையில் மூழ்கி விட்டார்.

mahalakshmi

அப்போது அவருக்கு ‘சந்நியாச வாழ்க்கை என்பது ஒருவருக்கு மறுபிறவி’ என்று சாஸ்திரத்தில் கூறியது நினைவுக்கு வந்தது. வித்யாரண்யர்  மஹாலக்ஷ்மியை பார்த்து ‘நான் சன்னியாச வாழ்க்கையை ஏற்க்கப் போகிறேன். சன்னியாச வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு இந்த பிறவி, மறு பிறவி தானே..

மஹாலக்ஷ்மியான நீ எனக்கு கொடுத்த வாக்கின்படி, மறு ஜென்மம் எடுத்த எனக்கு இப்பொழுது செல்வச் செழிப்பினை அள்ளித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வித்யாரண்யர். இவர் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மஹாலக்ஷ்மி மறைந்து விட்டாள். வித்யாரண்யர் பார்த்த இடமெல்லாம் தங்கமாக மாறியது. ஆனால் சன்னியாசம் வாங்கிய இந்த வித்யாரண்யர் அந்த தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்?

mahalakshmi

மஹாலக்ஷ்மியிடம் எப்படியாவது வரத்தை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் வித்யாரண்யரின் மனதில் இருந்தது. மஹாலக்ஷ்மி கூறியபடி அடுத்த ஜென்மத்தில் இந்த வரத்தை வாங்கி இருந்தாலே இவருக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும் என்பது அவருக்கு வெகு நேரம் கழித்து தான் புரிந்தது.

சற்று நேரம் நிதானமாக நடந்தது எல்லாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார் வித்யாரண்யர். நடந்ததுதான் நடந்துவிட்டது இனியாவது இந்த செல்வத்தை ஏதாவது ஒரு உபயோகமான காரியத்தில் ஈடுபடுத்துவோம், என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர் கண்களுக்கு தூரத்தில் இரண்டுபேர் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்தது தெரிந்தது.

Today Gold rate

அதன்பின்பு துங்கபத்திர நதிக்கரையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொடுத்து, இந்த இருவரையும் அந்த சாம்ராஜ்ஜியத்தில் அமர வைத்தார். சாதாரணமாக இருந்த இருவரும் ராஜாக்களாக மாறிவிட்டனர்.  மாலிக்காபூரின் படையெடுப்பால் சீர்குலைந்த கோவில்கள் எல்லாம் வித்யாரண்யர் கொடுத்த செல்வத்தினால் சீரமைக்கப்பட்டது. நாம் எல்லோராலும் அறியப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தை அமைத்தது இந்த வித்யாரண்யர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அந்த இரண்டுபேரும் ராஜாக்களாக மாறிய ஹரிஹரரும், புக்கரும் தான்.

river aaru

அதன்பின்பு வித்யாரண்யர் தனக்கென்று எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை சன்னியாசியாகவே வாழ்ந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த கதையின் அர்த்தம் என்னவென்று படித்த உங்களுக்கு புரிகின்றதா? நமக்கு எந்த செல்வத்தை எப்பொழுது எப்படி கொடுக்க வேண்டும் என்பது அந்த கடவுளுக்கு நன்றாகவே தெரியும். அந்த கடவுளை நினைத்து ‘எனக்கு இதை கொடு என்று கேட்பதன் மூலமாக’ எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ‘எனக்கு எதுவும் வேண்டாம்’ என்பதாலும் எதுவும் கிடைக்க படாமலும் இருப்பதில்லை. எது எப்போது நமக்கு வேண்டும் என்பது அந்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் அடுத்தவருக்கு தீங்கு நினைக்காத மனதைக் கொண்டு வாழ்பவரது புகழ் உலகெங்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பது நிச்சயமான உண்மை.

இதையும் படிக்கலாமே
தசாங்கம் என்கிற சித்த மூலிகை தூபம் தரும் வியக்க வைக்கும் பலன்கள் தெரியுமா?

English Overview:
Here we have God knows everything in Tamil. Kadavuluku ellam theriyum Tamil.
Kadavul vazhipadu murai in Tamil. How to pray god in Tamil.