- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நாளை கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு எப்படி சுவையாக செய்வது? என்று பார்ப்போமா?

நாளை கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு எப்படி சுவையாக செய்வது? என்று பார்ப்போமா?

- Advertisement -

அசுரர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர், இன்றளவிலும் பக்தர்களின் மனம் கவர்ந்தவராகவும் இருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தின் பொழுது கிருஷ்ணரை வழிபட்டு, அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து, விரதம் இருப்பது வழக்கம். இவ்வகையில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் கொண்டு செய்யப்படும் இந்த அவல் லட்டு ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. கிருஷ்ணரின் மனம் கவரவும், கிருஷ்ணரின் அருள் பெறவும் சுவையான அவல் லட்டு எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கெட்டியான சிகப்பு அவல் – ஒரு கப், வெல்லம் – அரை கப், நெய் – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10, திராட்சை – 10, துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

அவல் லட்டு செய்முறை விளக்கம்:
முதலில் அவல் லட்டு செய்வதற்கு கெட்டியான சிகப்பு அவல் எடுத்துக் கொள்ள வேண்டும். அவல் உணவு வகைகள் நிறைய உள்ளன. வெள்ளை அவல், மெல்லிதாக இருக்கும் அவல், கெட்டியாக இருக்கும் அவல், சிகப்பு அவல் என்று விதவிதமாக இருக்கும். இதில் கெட்டியான சிகப்பு அவல் கொண்டு இந்த லட்டு பிடிக்கும் பொழுது ரொம்பவே சுவையாக இருக்கும். அடுப்பில் ஒரு பேன் வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு கப் அளவிற்கு முழுமையாக அவலை எடுத்து சேர்த்து மிதமான தீயில் வைத்து லேசாக ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை நன்கு ஆறவிட்டு விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 90 சதவீதம் ரவை போல அரைத்தால் சரியாக இருக்கும். மற்றுமொரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு வெல்லத்தை சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெல்லத்தில் சிறு சிறு குப்பைகள் இருக்கும் எனவே இவ்வாறு பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பேனில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே நெய்யில் கொஞ்சம் உலர் திராட்சைகளையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைப்பட்டால் கொஞ்சம் நெய் விட்டு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் நெய்யில் வறுபட்டதும் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

பின்னர் வாசத்திற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்துள்ள அவலையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கிண்டி விடுங்கள். எல்லா பொருட்களும் ஒன்று திரண்டு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஓரளவுக்கு கை பொறுக்கும் சூட்டில் ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உங்கள் தேவைக்கு ஏற்ப லட்டு பிடித்துக் கொள்ளுங்கள். தேங்காயை ட்ரையாக வறுத்து சேர்த்தால் இரண்டு மூன்று நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம் ஆனால் இதை ஃபிரஷ்ஷாக சேர்த்துள்ளதால் உடனடியாக நெய்வேத்தியம் படைத்ததும் உண்டு தீர்த்து விட வேண்டும்.

சற்று முன்