நவகிரகங்களின் இளவரசனாக திகழக்கூடியவர் புதபகவான் இவருடைய அருள் ஒருவருக்கு முழுவதுமாக கிடைத்து விட்டால் அவர்கள் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பொருளாதாரம், தொழில் என அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். புத பகவான் குறுகிய காலக்கட்டத்தில் தன்னுடைய இடத்தை மாற்றக் கூடிய தன்மை கொண்டவர். இவரின் ஒவ்வொரு இடப்பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மே பத்தாம் தேதி அன்று மீன ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். வருகின்ற மே 31 வரை சுக்கிரனின் சொந்த ராசியான ரிஷப ராசியில் புதபகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்த பயணமானது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது அது குறித்து ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசியிலே புத பகவான் பயணம் செய்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு பலவிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகி பணவரவு அதிகரிக்கும்.
மிதுன ராசி
இந்த ராசிக்காரர்களும் குருபகவான் நல்ல பலன்களை கொடுக்கிறார். இவர்களின் வருமானம் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அதிர்ஷ்டத்தின் அனைத்து வாய்ப்புகளும் இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை வியாபாரம் தொழில் என அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொழில்கள் அனைத்தும் முடிவிற்கு வரும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கும் புதபகவான் பல அற்புதமான பலன்களை தர இருக்கிறார். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வருமானம் ஈட்டுவதற்கான அனைத்து வழிகளும் இவர்களுக்கு ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபத்தை பெறலாம் குறிப்பாக நிதி நிலைமையில் இந்த ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
இதையும் படிக்கலாமே: குருவால் யோகம் பெரும் ராசிகள்
புதபகவானின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய மூன்று ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது அவரவரின் கிரக சூழ்நிலை, ஜாதக அமைப்பினை பொறுத்து மாற்றத்திற்கு உட்பட்டது தான் என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.