ஒரு நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் வேலை செய்ய அந்த நாளில் தொடக்கத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியான ஒரு காலை உணவை இன்னும் மிகவும் சத்துள்ளதாக மாற்ற இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
செய்முறை
இந்த தோசை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் ரவை, கால் டீஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் என அனைத்தையும் சேர்த்த பிறகு ஒன்னரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து தட்டு போட்டு ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.
அடுத்ததாக ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கப் கோஸ், ஒரு கப் குடை மிளகாய், ஒரு கப் கேரட், அனைத்தையும் எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுத்து பேன் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த காய்கறி வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலை, கால் டீஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன் சாம்பார் பொடி அனைத்தையும்சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
இதற்கு காய்கள் அதிகமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை பாதியளவு வதங்கினால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை நாம் ஏற்கனவே கரைத்து வைத்த மாவில் இந்த காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். மாவு கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கூட கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு நமக்கு ரவை தோசை ஊற்றும் அளவிற்கு தண்ணியாக இருக்க வேண்டும்.
அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் இந்த மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து நம் எப்போதும் தோசை ஊற்றுவது போல ஊற்றி தேய்க்க கூடாது. ரவை தோசை ஊற்றுவது போல கரண்டி மாவை எடுத்து கல்லில் சுற்றிலும் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒரு புறம் சிவந்துடன் மறு புறம் திரும்பி போட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: இந்த மாங்காய் சீசன் முடியறதுக்குள்ளே மாங்காய் வச்சு டேஸ்டான இந்த சட்னி செஞ்சு பாருங்க. இட்லி தோசை சாதம் என எல்லாத்தோடும் வெச்சு சாப்பிட செமையா இருக்கும்.
இந்த தோசைக்கு எண்ணெய், நெய் எதுவும் சேர்த்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விருப்பப்பட்டால் ஊற்றி கொள்ளுங்கள். இதில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து இருப்பதால் தொட்டு கொள்ள சைடிஸ் ஆக எதையும் செய்ய வேண்டியது இல்லை. காலை நேரத்தில் இப்படி ஹெல்தியாக செய்து கொடுத்தால் அன்றைய நாள் முழுவதும் தேவையான சத்துக்கள் கிடைத்து விடும். நீங்களும் ஒருமுறை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.