Government Lawyer Salary
ஒரு நாடு சிறப்பாக இருக்க அந்த நாட்டின் நீதித்துறை மிகச் சிறப்பான முறையில் இயங்க வேண்டும். நீதித்துறை சிறப்பாக செயல்பட இன்றியமையாதவர்களாக விளங்குபவர்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். பொதுவாக வழக்கறிஞர்கள் என்றால் அவர்களின் வாடிக்கையாளர்கள் தரும் தொகை தான் அவர்களுக்கு வருமானமாக கருதப்படும். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் என்பவர் அரசு சார்பாக வழக்கை கையாள்வதால், அவருக்கு அரசாங்கமே சம்பளம் தருகின்றது. அந்த வகையில் ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்மில் பலருக்கும் அரசு வேலையில் இருப்பவர்கள் என்றாலே அவர்கள் அதிக அளவு சம்பளம் வாங்குகின்றவர்கள் என்றே கருதுகின்றோம். ஆனால் ஒவ்வொரு அரசு பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதால், ஒரு சில அரசு பணிகளுக்கான சம்பளம் என்பது மிக குறைவாகவும், சில வகை அரசு பணிகளுக்கான சம்பளம் மிக அதிகமாகவும் இருப்பதாக நாம் கருதுவோம்.
Government Lawyer Salary in Tamil
ஆங்கிலத்தில் Lawyer, Advocate என அழைக்கப்படுபவர் தான் தமிழில் வழக்கறிஞர், வழக்காடுபவர், வழக்குரைஞர், வக்கீல் என்பன போன்ற பல பெயரில் அழைக்கப்படுகின்றார். பொதுவாக ஒரு வழக்கறிஞர் என்பவர் இந்திய சட்டங்களை நன்கு கற்று தேர்ந்து, வழக்கறிஞர் தேர்வில் வென்று, வழக்கறிஞராக பட்டம் பெற்று பிறகு, அவர் பணி புரிய விரும்பும் நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொள்வார்.
பொதுவாக வழக்கறிஞர்கள் இரண்டு முறைகளில் பணியாற்றுவார்கள். ஒரு ஒருவகை வழக்கறிஞர்கள் அரசு சார்பில் கொடுக்கப்படும் வழக்குகளில் பாதிக்கப்படும் தனிநபர்களின் சார்பில் வழக்கு விசாரணைகளில் பங்கேற்பார்கள். மற்றொரு வகை வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வழக்கு விசாரணைகளில் பங்கேற்பார்கள்.
அரசு சார்பாக பங்கேற்கும் அரசு தரப்பு வழக்கறிஞரை ஆங்கிலத்தில் (Public Prosecutor) பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் என அழைப்பார்கள். அனைவருக்குமே இந்த அரசு தரப்பு வழக்கறிஞர் தோராயமாக எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி ஒரு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாத சம்பளமாக தோராயமாக ரூபாய் 16,793 முதல் ரூபாய் 18,504 வரை வழங்கப்படுகிறது. பொதுவாக அரசுத் திறப்பு வழக்கறிஞர்களுக்கு அவர்களின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சம்பள விகித அளவு மாறுபடும்.
Government Lawyer Age Limit
ஒருவர் அரசு தரப்பு வழக்கறிஞராக இந்திய நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வரை ஒருவர் அரசு தரப்பு வழக்கறிஞராக தகுதி பெற வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.