கிரக பீடைகள் நீங்கி தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ, இந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரம் உச்சரித்தால் போதும்!

panja-muga-anjaneyar-navagraham

பிரம்மச்சாரியராக இருந்தாலும் ஆஞ்சநேயரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரை போன்றே ஆஞ்சநேயரும் அனைவருக்கும் பொதுவானவர். இவர் ராமர் மீது கொண்ட பக்தியை பார்க்கும் பொழுதும், குரங்கு முகம் கொண்ட விசித்திர கடவுளாக இருப்பதாலும், இவர் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். நம்முடைய பள்ளிப்பருவத்தில் தேர்வில் வெற்றி பெற கட்டாயம் ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை நோட்டுப் புத்தகங்களில் எழுதி இருப்போம். பல்வேறு முகங்கள் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த முகத்தில் கிரக பீடைகளை நீக்குகிறார். அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

panjamuga anjaneyar

ஒரு மனிதனுடைய சுய ஜாதகத்தில் கிரகங்கள் பீடித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவன் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவிக்கிறான். ஒரு சிலருக்கு அல்ப ஆயுள் கூட தலை விதியில் எழுதப்பட்டிருக்கும். தீய கிரகங்கள் நமக்கு கொடுக்கும் தீராத துயரத்தை ‘கிரக பீடை’ என்கிறோம். கிரக பீடைகளை நீக்குவதற்கு இந்த ஆஞ்சநேயரை வழிபடுவது பலன் தரும் என்பது ஜோதிட நம்பிக்கை. ஆஞ்சநேயரின் பல முகங்கள் இருந்தாலும் பஞ்சமுக ஆஞ்சநேயர் தீர்க்காயுளை கொடுக்கின்றார்.

ஐந்து முகம் கொண்ட ஆஞ்சநேயர் ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கப்படுகிறார். இதில் கிழக்கு முகமாக இருக்கும் ஆஞ்சநேயர் உடைய முகத்திற்கு தெற்கில் நரசிம்மரும், ஹயக்ரீவரும், வடக்கில் கருடர், வராகர் ஆகியோரும் இருப்பார்கள். பஞ்ச முகத்தை கொண்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவதால் கெட்ட கனவுகள் என்பது வரவே வராது. ஒரு சிலர் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து பயந்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் போதும், அந்த பயத்தில் இருந்து சட்டென மீண்டு விடலாம்.

panjamuga-anjaneyar

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய

- Advertisement -

panjamuga-anjaneyar1

சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

panjamuga-anjaneyar2

தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

panjamuga-anjaneyar3

பக்தர்களை காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரங்களை தன்னுள் கொண்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் தீமைகளை அழிக்கவும், கெட்ட விஷயங்களில் இருந்து நம்மை காப்பாற்றி, பீடைகளை ஒழித்து நல்வாழ்வு கொடுக்கவும் அருள்பாலிக்கிறார். அவரை நினைத்து சனிக்கிழமைகளில் எட்டு முறை மேற்கூறிய இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை காணலாம்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமையில் இந்தப் பாடலை மட்டும் பாடினால் மகாலட்சுமியே நேரில் வந்து பணத்தை அள்ளித் தருவாள் தெரியுமா?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.