சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? இந்தப் பூஜையைச் செய்பவர்கள், நிச்சயமாக சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் போவது உறுதி.

house

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லோருக்குமே இந்த ஆசை உண்டு. நமக்காக சொந்தமாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் என்பது! ஆசைப் பட்டு விட்டால் மட்டும் நம்மால் வீட்டை கட்டி விட முடியாது. ஆசை இருப்பதற்கு ஏற்ப, விடாமுயற்சியும் கடின உழைப்பும் நமக்குள் இருந்து கொண்டே வர வேண்டும். அப்போது தான் சிறுக சிறுக பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கி, வீடு கட்டும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய முயற்சியில் ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளை சமாளிக்க, உங்களுக்கு பக்கபலமாக ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் வழிபாட்டு முறைகளும் துணைநிற்கும்.

gragapravesam

உங்களுக்கு அந்த கிரக தேவதையின் ஆசீர்வாதத்தை சீக்கிரமே பெற்றுத் தந்து சொந்த வீட்டு கனவை நனவாக்க சுலபமான ஒரு பரிகார வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு வீட்டில் கிரகலட்சுமி வாசம் செய்வது அந்த வீட்டினுடைய நில வாசப்படி தான். அந்த நில வாசற்படியை ஒரு வீட்டில் எந்த அளவிற்கு பராமரித்து பூஜை செய்து வருகிறார்களோ அவர்களுடைய வேண்டுதல் நிச்சயம் கூடிய விரைவில் பலிக்கும் என்பது உறுதி. (நீங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் அந்த வீட்டு நிலை வாசற் படியில், அந்த வீட்டு கிரஹ தேவதை வாசம் செய்கிறாள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.)

சொந்த வீடு கட்டினால் கூட, பூமி பூஜையை போட்ட பின்பு, அதற்குப் பின்பு நில வாசலை வைக்கும் போது, ஒரு பூஜையை சிறப்பாக செய்வார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். அந்த அளவிற்கு நில வாசலுக்கு அதிகப்படியான சக்தி உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய நல்லது கெட்டதை கூட சில சமயங்களில் நில வாசப்படி நமக்கு உணர்த்தும். இதைத்தான் அந்தக் காலத்தில் சொல்வார்கள்! நில வாசல் படியை தாண்டி வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, கால் தடிக்கினால் அது அபசகுணம். சிறிது நேரம் வீட்டிற்குள் வந்து அமர்ந்து தண்ணீர் குடித்து விட்டு செல்ல வேண்டும் என்று.

nilai-vasal

நில வாசல் படியில் கிரக தேவதைகள் மட்டுமல்ல குலதெய்வமும் இன்னும் சில நேர்மறை ஆற்றல்களை கொடுக்கக்கூடிய தேவதைகளும் அந்த இடத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் அதை நிறைவேற்ற நீங்கள் கிரஹ தேவதையை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

நேர்மறை எண்ணத்தோடு உங்களாலும் வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு, 48 நாட்கள் இந்த பூஜையை செய்து பாருங்கள். தினமும் உங்களுடைய நில வாசற்படியை ஒரு ஈரத்துணியால் துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, இரண்டு பூக்களை வைத்து, நில வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இரண்டு பக்கமும், இரண்டு மண் அகல் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு கொஞ்சமாக, அட்சதையை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, நில வாசலுக்கும் வலது பக்கம் அமர்ந்து, வலது பக்கம் இருக்கக்கூடிய விளக்குக்கு முன்னால் நில வாசற்படிக்கு பூஜை செய்ய வேண்டும்.

atchathai

‘ஓம் கிரக லட்சுமியே போற்றி!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வீடு வாங்கவேண்டும் என்ற உங்களுடைய எண்ணத்தை கிரஹ தேவியிடம் சொல்லுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையை செய்யலாம். மாதவிலக்கு ஏற்படும் அந்த நாட்களை தவிர்த்து விட்டு 48 நாட்கள் முழுமூச்சோடு முடிந்தால், சூரிய உதயத்திற்கு முன்பு உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்து பாருங்கள்! நீங்கள் சொந்த வீடு கட்டுவது நிச்சயம் நடக்கும்‌. அந்த வீட்டிற்கு உங்கள் சொந்த பந்தங்களோடு மனநிறைவோடு நீங்கள் கிரகப்பிரவேசம் போவது உறுதி. முயற்சி செய்து பாருங்கள்.