- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகிரக தோஷத்தை நீக்கும் அக்னி நட்சத்திர பரிகாரம்

கிரக தோஷத்தை நீக்கும் அக்னி நட்சத்திர பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் அவர் அனுபவிக்க கூடிய கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்வது கர்ம வினைகள் தான். அந்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒருவருடைய ஜாதகமும் அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பும் ஏற்படுகிறது. அதனால்தான் பலருக்கும் கிரஹ தோஷம் ஏற்பட்டு அவர்கள் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படாமல் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இவை அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர் அக்னி நட்சத்திரம் முடிவடைவதற்குள் செய்ய வேண்டிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்னி நட்சத்திர பரிகாரம்

அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் நான்காம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த நாளில் சூரிய பகவானின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். அதனால் பல ஆலயங்களில் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளையும் செய்வார்கள். இதை அக்னி நட்சத்திர தோஷம் என்று கூட கூறுவார்கள். அப்படிப்பட்ட தோஷம் மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தானம் நமக்கு இருக்கக்கூடிய தோஷத்தை நீக்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும்.

- Advertisement -

அக்னி நட்சத்திரம் நிறைவடைவதற்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் இந்த தானத்தை நாம் செய்யலாம். இந்த தானத்தை செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நாம் குளித்து இருக்க வேண்டும். அதேபோல் எந்தவித உணவும் சாப்பிட்டு இருக்க கூடாது. ஏன் தண்ணீரை கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த தானத்தை செய்தால் தான் நமக்கு இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் முற்றிலும் நீங்கும்.

பொதுவாகவே தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று கூறி கேள்வி பட்டு இருக்கிறோம். அதுவும் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யக்கூடிய தானம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பசு மாடு, நாய் போன்ற உயிரினங்களுக்கு நாம் தானம் தருவதன் மூலம் தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். சகல தெய்வங்களும் வீற்றிருக்கக் கூடிய ஒரு உயிரினமாக தான் பசுமாடு திகழ்கிறது. அதனால் பசு மாட்டிற்கு நாம் இந்த முறையில் தானம் செய்து வழிபாடு செய்ய அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இந்த தானத்தை அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வெறும் வயிற்றில் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு கீரைகள் அல்லது பழங்களை வாங்கி தங்களின் கையால் தர வேண்டும். பிறகு அந்த பசுமாட்டை தொட்டு வணங்கி வழிபாடு செய்துவிட்டு வரவேண்டும். இப்படி ஒரு முறை மட்டும் நாம் செய்தாலே போதும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்குவதோடு செல்வ செழிப்புடன் வாழ்வதற்குரிய யோகம் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே:காரிய வெற்றி ஏற்பட்டு பணவரவை அதிகரிக்க

எளிமையான இந்த தானத்தை மன மகிழ்ச்சியுடன் அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் செய்பவர்களுக்கு கிரக தோஷங்கள் முற்றிலும் நீங்கும், கர்ம வினைகள் குறையும், சகல செல்வங்களும் தேடி வரும் யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்