உங்களுக்கு அதிக செல்வம், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க இதை செய்யுங்கள்

navagraham

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே சக்தி தன்மை நிறைந்ததாகும். அதிலும் விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை தங்களின் சக்தி வாய்ந்த கிரணத்தை இந்த பூமியின் மீது செலுத்துகின்றன. அதிலும் நவகிரகங்கள் உலகில் வாழும் உயிர்கள் மீது செலுத்தும் தாக்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மனிதர்களுக்கு அவர்களின் கர்மவினைக்கு ஏற்ப நவகிரகங்களும் பாதகமான பலன்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுத்து வாழ்வில் மேலான நிலையை அடைய கூறப்பட்ட ஒரு வழிமுறைதான் கிரக சாந்தி பூஜையாகும். இந்த கிரக சாந்தி பூஜை செய்வதால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோத்திரங்கள் திசா புக்தி காலங்கள் நடப்பவர்களும், வாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, செல்வம், திருமண வாழ்க்கை, புத்திரப்பேறு, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விடயங்களில் பாதகங்கள் நீங்கி மேன்மையான நிலையை பெறுவதற்கும் இந்த கிரக சாந்தி பூஜை செய்யலாம்.

கிரக சாந்தி பூஜையை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினம் அல்லது ஏதேனும் சுப முகூர்த்த தினங்களில் இந்த சாந்தி பூஜையை செய்வது மிகவும் சிறப்பானது. இந்த பூஜையை உங்கள் வீட்டிலேயே அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வது நல்லது. அப்படி செய்வதால் அனைவருக்கும் வாழ்வில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.

கிரக சாந்தி பூஜை செய்கின்ற குடும்பத்தின் தலைவரும், அவரின் வாழ்க்கை துணையும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது இந்த கிரக சாந்தி பூஜையின் பலன் பன்மடங்காக கிடைக்கும். கிரக சாந்தி பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் வேதியர்களுக்கு வழங்கப்பட்ட பின் நல்ல முகூர்த்த நேரத்தில், ஹோமம் வளர்த்து வேதியர்கள் நவகிரக மந்திரங்களை துதித்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் பாவங்களும் நீங்கும் வகையில் ஹோம பூஜைகள் செய்வர். பூஜையின்போது குடும்பத்தலைவர் வேதியர்கள் அறிவுறுத்தும் வகையில் மாவிலைகள், மலர்கள் அரிசி மற்றும் நவ தானியங்கள் போன்றவற்றை ஹோமத் தீயில் இட்டு நவக்கிரகங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த கிரக சாந்தி பூஜை முடிந்ததும் வசதி குறைந்த மக்களுக்கு ஆடைகள் தானம் செய்வது உங்களின் தோஷங்களை முழுவதுமாக போக்கி உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். பூஜையில் பயன்படுத்தப்பட்ட நவகிரக யந்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வர வேண்டும். கிரக சாந்தி பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பூஜை முடிந்த பிறகு உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு இடத்தில் குழியைத் தோண்டி அதில் போட்டு புதைத்து விட வேண்டும்.

Navagraham

இந்த கிரக சாந்தி பூஜை செய்து கொள்வதால் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பாதகமான கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும் நீங்கள் வசிக்கின்ற வீட்டில் தெய்வீகமான சக்திகள் நிரம்பி உங்களுக்கு நன்மைகளை செய்யும் நீங்கள் புதிதாக மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சிகளிலும் தடை தாமதங்கள் இல்லாமல் அக்காரியங்கள் வெற்றி பெற்று உங்களுக்கு வளங்கள் பல பெருகும் கண் திருஷ்டிகள் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு செய்யப்படும் மாந்த்ரீக ஏவல்களின் தாக்கத்தை கொடுக்கும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தும்

இதையும் படிக்கலாமே:
நீங்கள் விரும்பியது கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Graha shanti puja in Tamil. It is also called as Poojai valipadu in Tamil or Homam poojas in Tamil or Navagraha puja in Tamil or Navagraha pariharangal in Tamil or Poojaigal palangal in Tamil.