சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற உங்களுடைய ஆசை நிச்சயம் நிறைவேறும். இந்த 1 படத்தை மட்டும் உங்கள் வீட்டில் வைத்து அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால்!

house

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அந்த ஆசை நிறைவேறுவதற்கான முயற்சிகளையும் சிலர் மேற்கொண்டு வருவார்கள். இருப்பினும் அந்த முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள், சின்ன சின்ன கஷ்டங்கள் வரும். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைக்கும் போது, அந்த பணத்தினை செலவு செய்வதற்காக விரைய காலங்களும் வரத்தான் செய்யும். கையில், நிலம் வாங்கவோ வீடு கட்டவோ சேமிப்பில் இருக்கும் தொகை, வேறு ஏதாவது ஒரு விஷயத்திற்கு நிச்சயம் செலவாகக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். இந்த தோல்விகளை எல்லாம் பார்த்து, வீடு கட்டும் ஆசையில் இருந்து நாம் பின்வாங்கி விடக்கூடாது.

நம் மனதிலிருக்கும் குறிக்கோளை இன்னும் ஆழமாக வைத்துக்கொண்டு, இது நமக்கு வரக்கூடிய சோதனை என்று நினைத்து, அந்த சோதனையையும் கடந்து, தொடர்ந்து பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சரி, இந்த பணம் சேர்க்கும் முயற்சியில் வரக்கூடிய தடைகளை எப்படி நிவர்த்தி செய்வது. வீடு கட்டும் ஆசையை நிலம் வாங்கும் ஆசையை எப்படித்தான் நிறைவேற்றிக் கொள்வது.

ஆன்மீகத்தில் இதற்கென சுலபமான நிறைய வழிபாடுகள் உள்ளன. அதில் சுலபமான, சூட்சமமான, சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கிரகலட்சுமி என்று சொல்லப்படும் படத்தினை உங்களுடைய வீட்டில் நிலை வாசல் படிக்கும் மேல் பக்கத்தில் உள்பக்கம் பார்த்தவாறு மாட்ட வேண்டும். கிரகலட்சுமி தன்னுடைய வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் வரக்கூடிய படம்.

grahalashmi

அந்தப் படத்தினை வாங்கி பிரேம் போட்டு மாட்டி கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டிக் கொண்டாலும் சரி, வாசலுக்கு மேல் பக்கத்தில் உங்கள் வீட்டிற்குள் கிரகலட்சுமி வரும்படி வைத்து விட்டு, தினமும் அந்த புகைப்படத்தை பார்த்து உங்களுடைய சொந்த வீடு கட்டும் ஆசை நிறைவேறி விடும் என்று நீங்கள் நேர்மறையாக எண்ணிக் கொள்ளுங்கள்.

அந்த கிரக லக்ஷ்மியின் படத்தை பார்க்கும் போதெல்லாம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு, நிறைவேறி விட்டதாகவே மனதில் எப்போதும் சந்தோஷமாக எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது, கிரகலட்சுமியையும் மனதார நினைத்துக் கொண்டு ‘ஓம் கிரகலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது, பூஜை செய்வது மேலும் நல்ல பலனைக் கொடுக்கும்.

grahalashmi1

இப்படியாக கிரக லட்சுமியின் ஆசீர்வாதத்தை முழுமையாக நாம் பெற்று விட்டாலே போதும். நம்முடைய முயற்சிகள் படிப்படியாக வெற்றியை அடைய தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். கூடிய விரைவில் நீங்களே எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.