கமகம வாசத்துடன் சுவையான மத்தி மீன் குழம்பை பாட்டி கைப்பக்குவத்தில் எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா

fiah
- Advertisement -

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் பாட்டி காலத்தில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின் கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் குழம்பை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mutton

தேவையான பொருட்கள்:
மத்தி மீன் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 2, புளி – 200 கிராம், மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைக்கிலோ மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து இரண்டு, மூன்று முறை அலசி கொண்டு, அதனுடன் அரை எலுமிச்சைப் பழச் சாறு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

fish

பின்னர் புளியை தண்ணீர் சேர்த்து ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு மண் சட்டியை வைத்து, அதனுள் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

tomato

இவை பொன்னிறமாக வதங்கியதும் 4 ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிது நேரம் இவற்றை கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்து சற்று கெட்டியானதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை குழம்புடன் சேர்க்க வேண்டும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் குழம்பை தட்டுப் போட்டு மூடி அடுப்பை சிறிய தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் பாட்டியின் கை பக்குவத்தில் சுவையான மத்தி மீன் குழம்பு தயாராகி விட்டது.

mealmaker-gravy4

இங்கு சொல்லப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த சுவையான மீன் குழம்பை செய்து கொடுத்துப் பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் இந்த குழம்பின் சுவைக்கு அனைத்துமே ஒரு நொடியில் காலியாகிவிடும்.

- Advertisement -