பச்சை பட்டாணி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

pachai-pattani

அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது. பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pachai pattani

பச்சை பட்டாணி பயன்கள்

எலும்புகள்
மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

சருமம்

மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயதுஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.

pachai pattani

- Advertisement -

நார்ச்சத்து

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

pachai pattani

ரத்த சோகை

நமது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் குறைகிற போது நமக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. இதை போக்க சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது அவசியம். பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகமுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

மனநலம்

நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனநிலை மற்றும் உடல் நிலையில் சிறந்த குணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

pachai pattani

ஊட்டச்சத்து

நாம் அனைவருமே ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிட்டு வந்தாலே பெரும்பாலான நோய்கள் வராமல் தடுத்து விட முடியும். பச்சை பட்டாணியில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

இதயம்

உடலில் உயிர் இருப்பதற்கு முக்கியமான உறுப்பாக இதயம் இருக்கிறது. இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு ரத்தம் சென்று வருகிறது. இப்படி ரத்தம் தடையின்றி சீராக செல்ல ரத்தத்தில் ஆன்டி – ஆக்சிடண்டுகள் அதிகம் தேவை. பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இவை அதிகம் கிடைப்பதால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.

pachai pattani

வயிற்று புற்று நோய்

புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் வயிற்றில் ஏற்படும் வயிற்று புற்று நோய் என்பது தற்காலத்தில் அதிகம் பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது. பச்சை பட்டாணியை தினமும் 2 மில்லிகிராம் அளவிற்கு சாப்பிட்டு வரும் நபர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அல்சைமர் நோய்

வயதாகும் நபர்களில் சிலருக்கு மூளை செல்கள் மிகவும் வலுவிழப்பதால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரித்து அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே:
ரத்த அழுத்தம் குறைய மருத்துவ குறிப்புக்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Green peas benefits in Tamil. It is also called Pachai pattani in Tamil or Pachai pattani payangal in Tamil or Pachai pattani uses in Tamil or Pachai pattani in Tamil.