குருவின் பரிபூரண அருள் கிடைத்து எல்லா திசையிலும் இருந்தும் பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க வியாழக்கிழமை அன்று வீட்டில் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.

guru panam
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை இந்தக் கூற்றுக்கு ஏற்ப ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வையானது சாதகமாக அமைந்துவிட்டால் அவர்கள் கல்வி பதவி வருமானம் என்று எந்த ஒரு வகையிலும் குறைவில்லாத சகல சம்பத்துடன் வாழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாழ்வில் எல்லா நேரத்திலும் அமைந்து விடாது. இது சில காலக்கட்டத்தில் மட்டும் தான் நடக்கும். இந்த குருவின் அருள் பார்வையானது நமக்கு எப்போதுமே கிடைக்க வேண்டும் எனில் அதற்கும் ஆன்மீகம் சில பரிகாரங்களை நமக்கு தந்திருக்கிறது. அவற்றில் ஒன்றை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குருவின் அருள் பார்வை கிடைக்க செய்ய வேண்டியது
இந்த பரிகாரத்தை குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் நாளன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதே போல் வீட்டை துடைக்கும் பொழுது சிறிது கல் உப்பு, மஞ்சள் சேர்த்து துடைத்து விடுங்கள். இது இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவியாக இருக்கும்.

- Advertisement -

அதே போல் அன்றைய தினத்தில் பூஜையறையும் சுத்தம் செய்து படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வீட்டை ஒரு தெய்வீக சக்தி நிறைந்து இருக்கும்படி மாற்றிக் கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்த பிறகு ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, ஒரு பட்டை, ஒரு கைப்பிடி துளசி இந்த மூன்றையும் போட்டு விடுங்கள். இதை போட்ட சிறிது நேரத்திற்கு எல்லாம் இதில் உள்ள சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் அனைத்து இடங்களிலும் தெளித்து விடுங்கள். ஒரு இடம் விடாமல் தெளிக்க வேண்டும். மூளை முடுக்கு பாத்ரூம் போன்ற இடங்களில் கூட இதை தெளிக்க வேண்டும். எல்லா இடத்திலும் இந்த தண்ணீர் பட வேண்டும் என்ற காரணத்தினால் தான் நாம் ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி தெளிக்கிறோம். இப்படி தெளித்த பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை நிறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறு மிளகு போட்டு வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை நீங்கள் வீடு முழுவதும் தெளிக்கும் பொழுது குரு பகவானுடைய அருளானது உங்களுக்கு கிடைக்க தொடங்கி விடும். ஆனால் நம் வீட்டிற்கு யாரேனும் வரக்கூடும் அல்லது நாமே தினமும் வெளியில் சென்று வீட்டிற்குள் வரும் போது நம்மை அறியாமலே வேறு தீய சக்திகளோ எதிர்மறை ஆற்றலோ கொண்டு வரக் கூடும். வரவேற்ப்பு அறையில் இந்த உப்பும் மிளகும் இருக்கும் பொழுது அவையெல்லாம் வீட்டிற்குள் வராமல் தடுத்து விடும்.

இதையும் படிக்காலமே: இவர்கள் கையில் இருந்து இந்த நேரத்தில் ஒரே ஒரு ரூபாயை வாங்கி பாருங்கள். அப்பறம் என்ன ஜாக்பாட் அடித்தது போல பணமழை பொழிய தொடங்கி விடும்.

குருவின் பரிபூரண அருள் கிடைக்க இந்த எளிய பரிகாரம் உதவியாக இருக்கும் என்பதோடு வீட்டில் இருக்கும் நெகட்டிவிட்டியை விரட்டவும் இந்த பரிகாரமே போதும். இவை இரண்டும் சரியாக நடந்தாலே போதும் பணம் எல்லா திசையிலும் இருந்தும் நம்மை நோக்கி வரத் தொடங்கி விடும். வீட்டில் இல்லை என்ற பிரச்சனையே வராமல் இருக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலனடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -