இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் 1 முறை ஏற்றினாலே போதும். குரு பகவான் மனமுருகி பல கோடிகளை கொட்டி கொடுத்துவிடுவார்.

guru

குரு பார்க்க கோடி நன்மை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த குருபகவான் நம்முடைய ஜாதக கட்டத்தில் சரியாக அமைந்து இருந்தாலும் சரி, அப்படி குருபகவானால் நமக்கு அனுகிரகம் கிடைக்காத சூழ்நிலை இருந்தாலும் சரி, குருபகவானின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ஆன்மீக ரீதியாக என்ன வழிபாட்டினை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே ஒவ்வொரு கிரகங்களுக்கு என்று சிறப்பான தானியங்கள் தனித்தனியாக உள்ளது. அந்த வரிசையில் குருபகவானுக்கு கொண்டைக் கடலையை மட்டுமே உரிய தானியம் என்று நாம் நினைத்து வருகின்றோம். ஆனால் கொண்டைக்கடலை அல்லாத மற்றொரு பொருளும் குருபகவானுக்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

kondai-kadalai

குருபகவானுக்கு சொந்தமான அந்த மற்றொரு பொருள் எது? அதை வழிபாட்டில் நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? முறையாக எத்தனை வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும், என்ற அத்தனை கேள்விகளுக்கும் இந்த பதிவின் மூலம் பதிலை தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் கடலைபருப்பு குரு பகவானுக்கு உரிய ஒரு பொருள் தான். இதை தானியம் என்று சொல்ல முடியாது. இது ஒரு பருப்பு வகை தான். இருப்பினும் இதை குருபகவானுக்கு நிவேதனமாக வைத்து வழிபாடு செய்தால் குருவின் பார்வை நம்மீது விழும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

guru-bagavan

வியாழக்கிழமை அன்று கடலை பருப்பை நன்றாக வேகவைத்து சுண்டல் செய்து உங்கள் வீட்டிலேயே குரு பகவானை நினைத்து, முருகப் பெருமானை நினைத்து பூஜை செய்து அந்த பிரசாதத்தை உங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் கோவிலில் உள்ள குரு பகவானுக்கு இதை நிவேதனமாகப் படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

- Advertisement -

இதோடு சேர்த்து வியாழக்கிழமை மாலை உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஏற்றிப் பாருங்கள். ஒரு தாம்பூலத்தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக கடலைப்பருப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேலே மண் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குரு பகவானை வேண்டி மனதார தீபம் ஏற்றி வையுங்கள்.

aarumugan-deepam

இந்த தீபத்தின் அருகில் முடிந்தால் மஞ்சள் நிறப் பூவை வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து 9 வியாழக்கிழமைகள் ஏற்றினால் நீங்கள் எந்த வேண்டுதல் வைத்தாலும் அது கூடிய விரைவில் நிறைவேறும்.

குறிப்பாக உங்களுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், உங்கள் வீட்டில் பண கஷ்டம் தீர வேண்டும், அடமானம் வைத்த தங்க நகையை மீட்க வேண்டும், விசேஷங்களுக்கு புதியதாக தங்க நகை வாங்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் புத்திக் கூர்மையில் புத்திசாலித்தனமாக விளங்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் வேண்டும், இப்படியாக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை வேண்டுதலாக வைக்கும் பட்சத்தில் அது 9 வாரங்களில் அந்த வேண்டுதல் நிறைவேறுவதை கண்கூடாக காணலாம். நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.