நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ

guru-bagawan-compressed

பணத்தை சரியான வழியில் சம்பாதித்தால் மட்டும் போதாது. எதிர்கால தேவைகளுக்காக அதை முறையாக சேமிக்க வேண்டியது அவசியமாகும். எல்லா மக்களும் ஏதாவது வேலை, தொழில் செய்து பொருளீட்டுகின்றனர். அதை சேமிக்கவும் செய்கின்றனர். ஆனால் அனைவராலுமே குறைந்த காலத்தில் மிக பெறும் அளவில் பொருளை சேகரிக்க முடியாமல் போகிறது. பொருள் சேர்க்கை மட்டுமன்றி, பொன் எனும் தங்க ஆபரணங்கள் போன்றவற்றின் சேர்க்கை உங்களுக்கு ஏற்பட துதிக்க வேண்டிய “குரு மூல மந்திரம்” இதோ.

குரு மூல மந்திரம்

ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ்

பொன்னன் என்பதும் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் மூல மந்திரம் இது. மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருபவர்கள் வாழ்வில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படும். வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 40 நாட்களில் இம்மந்திரத்தை 16000 உரு ஜெபித்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.

guru

நாம் வானில் இரவு நேரத்தில் பார்க்கும் போது பொன்னிறத்தில் ஒளிரும் ஒரு கிரகத்தை காணலாம். அந்த கிரகம் நமது ஜோதிடத்தில் பொன்னன், குரு என அழைக்கப்படும் வியாழன் கிரகமாகும். ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடகாலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாக குரு கிரகம் இருக்கிறது. எந்த ஒரு நபரின் ஜாதகத்திலும் குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும் போது அந்நபருக்கு அனைத்து விதமான வளங்களும் வந்து சேரும். அப்படியில்லாதவர்கள் குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதிப்பதால் நன்மையான பலன்களை பெறலாம்.

- Advertisement -

குரு பகவான் வழிபாடு

நவக்கிரகங்களில் எந்தவொரு ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் முழுமையான நற்பலன்களை அருளக்கூடிய ஒரு சுப கிரகமாக குருபகவான் இருக்கிறார். அப்படியான குருபகவானை அவருக்குரிய மூல மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் வருகின்ற வியாழக்கிழமை மிகச்சிறந்த தினமாக இருக்கிறது. அன்றைய தினத்தில் நவக்கிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, வெள்ளை கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி குரு பகவானுக்குரிய மூல மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை துதித்து ஜெபிப்பதால் நாம் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைக்கப் பெற குரு பகவான் அருள் புரிவார்.

குரு பகவான் பரிகாரங்கள்:

முழுமையான சுப கிரகமான குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு நவக்கிரகங்களில் குரு பகவான் தலமான தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு காலை 8 மணிக்குள்ளாக சென்று, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது குருபகவானின் அருளை உங்களுக்கு பெற்றுத் தரும்.

guru

மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு வியாழக்கிழமை தினத்தில் காலை 8 மணிக்குள்ளாக சென்று, 27 கொண்டைக்கடலை கோர்த்த மாலையை குருபகவானுக்கு அணிவித்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பு வகையை நைவேத்தியம் செய்து, குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை துதித்து வருவதால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரங்கள் முதல் அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே குருபகவானின் முழுமையான அருளை பெற முடியும்.

guru

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஒரு வியாழக்கிழமை தினத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற இனிப்பு வகைகளை உண்ண கொடுக்க வேண்டும். குரு பகவானின் வாகனமாக யானை இருக்கிறது. கோயில் யானைகளுக்கு வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை உண்ணக் கொடுப்பது உங்களுக்கு குருவின் முழுமையான நல்லருளை பெற்றுத்தரும்.

guru

வேதங்களுக்கு அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே உங்களால் இயன்ற பொழுது உங்கள் சக்திக்கே ற்ப வேத பாராயணம் செய்யும் வேதியர்களுக்கு மஞ்சள் நிற துணிகளை வஸ்திர தானம் செய்வது, ஜாதகத்தில் குரு திசை, குரு புத்தியில் கெடுதலான பலன்களை அனுபவிப்பவர்கள் குரு கிரக தோஷங்கள் நீங்கப்பெற்று செல்வம் மற்றும் இன்ன பிறசுகபோகங்களும் கிடைத்து சிறப்பாக வாழ குரு பகவான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:
ஆண்டாள் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru moola mantra in Tamil. It is also called Guru bhagavan mantra in Tamil or Guru slokam in Tamil or Guru bhagavan thuthi in Tamil or Guru thuthi in Tamil.