குரு பகவானின் பார்வை உங்களின் மீது பட வேண்டுமா? கோடி நன்மையை அடைய வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம்.

guru

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். நம்முடைய ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருந்தால், நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கும். குருவின் பார்வை உங்களுடைய ஜாதக கட்டத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும், குருபகவான் சரியான இடத்தில் உங்களுடைய ஜாதகத்தில் அமரவில்லை என்றாலும், வாழ்க்கையில் சுபகாரியத் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வீட்டில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்க குரு பகவானுக்கு தொடர்ந்து 21 நாட்கள், இந்த பரிகாரத்தை செய்து வந்தால் குருவின் அனுக்கிரகம் கிடைத்து, வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும்.

guru-bhagavan

கொண்டைக்கடலை குரு பகவானுக்கு உரிய தானியம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்த நிறம் என்பதையும் நாம் எல்லோரும் அறிவோம். இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பரிகாரம் என்று சொல்வதைவிட, இதை வழிபாட்டு முறை என்றே சொல்லலாம்.

கருப்பு கொண்டை கடலை அல்லது வெள்ளை கொண்டைக்கடலை இதில் எது வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அன்று ஒரு கைப்பிடி அளவு, கொண்டைக்கடலையை கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தக் கொண்டைக் கடலைகளை தட்சிணாமூர்த்தியின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டாலும் சரிதான், இல்லை என்றால் நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானின் பாதங்களில் வைத்து உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டாலும் சரிதான்.

kondai-kadalai

ஆகமொத்தத்தில் குரு பகவானின் பாதங்களில் வைத்த அந்த கொண்டைக் கடலையை உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, உங்களுடைய வீட்டிற்கு வியாழக்கிழமை அன்று எடுத்து விர வேண்டும்.

- Advertisement -

அடுத்த நாள் வெள்ளிக் கிழமையிலிருந்து இந்த பரிகாரத்தை தொடங்கலாம். உங்களுடைய வீட்டில் செம்பு அல்லது பித்தளை சொம்பு இருந்தால் அதில் நிறைய, சுத்தமான தண்ணீரை ஊற்றி, குரு பகவானின் பாதங்களில் இருந்து எடுத்து வந்த கொண்டைக்கடலையை அந்த தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளையும் அந்த தண்ணீரில் போட்டு, உங்களது கைகளை சொம்பின் மேல் வைத்து, ‘ஓம் குருவே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

guru bagwan

அதன் பின்பாக மனதார குரு பகவானை நினைத்து, உங்களுடைய வீட்டில் திருமண தடை இருந்தாலும், நல்ல வேலை கிடைக்கவில்லை என்றாலும், குழந்தை பாக்கியம் வேண்டுமென்றாலும், நோய் நொடியற்ற வாழ்க்கை தேவை என்றாலும் இப்படியாக எந்த பிரார்த்தனை இருந்தாலும் அதை சொல்லி, அதற்கான நிவர்த்தி கிடைக்க வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ளுங்கள்.

thulasi theertham

அதன் பின்பு அந்த தண்ணீரை உங்களது கைகளாளேயோ அல்லது மா இலைகளாலோ உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். உங்களது தலையிலும் தெளித்துக் கொள்ளலாம். உங்களது குடும்ப உறுப்பினர்களின் தலையிலும் தெளித்து விடலாம். மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி, வீட்டில் சுபகாரியங்கள் கட்டாயம் நடைபெறும் என்பதில் சந்தேகமே கிடையாது.

navagragham

முதல் நாள், வழிபாட்டிற்காக பயன்படுத்திய அதே கொண்டைக் கடலையை, வழிபாடு முடிந்ததும், தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு வெள்ளை துணியில் போட்டு முடித்து வைத்து விட்டு, மறு நாளும் அதே கொண்டை கடலையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு அந்த கொண்டை கடலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் வியாழக்கிழமை ஒரு கைப்பிடியளவு கொண்டைக்கடலையை கொண்டுபோய் குரு பகவானின் பாதங்களில் வைத்து, அர்ச்சனை செய்து மீண்டும் அந்த கொண்டைக்கடலையை ஒரு வாரம் பயன்படுத்தி வர வேண்டும்.

lemon-sadam

21 நாட்கள் இந்த பரிகாரத்தை முடித்துவிட்டு, குரு பகவானுக்கு ஒரு வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பிரசாதம், எலுமிச்சை பழ சாதம் ஆக இருந்தாலும் பரவாயில்லை, நெய்வேத்தியம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரத்தை தானமாக கொடுத்து உங்களது பரிகாரத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிற பிரசாதத்தை வினியோகம் செய்து விடுங்கள். நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுகிறார்களா? அதற்கு இவற்றில் சிலவும் காரணமாக இருக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.