குரு பெயர்ச்சி பலன்கள் 2018 கடகம்

guru-peyarchi kadagam

கடகம்:

Kadagam Rasi

பிறரை சரியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அதிபதியாகிய சந்திரனுக்கு நட்பு கிரகமாகிய குரு பகவான் 04-10-2018 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு 5 ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். குரு பகவான் ஜாதகத்தில் எந்த ஒரு ராசிக்கும் ஐந்தாம் இடத்தில் வருவது மிக சிறப்பான ஒரு அம்சமாகும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பணம் அதிகளவில் வந்து சேரும். உங்கள் தாத்தா பாட்டிகளின் பரம்பரை சொத்துக்கள் உங்களை வந்தடையும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு அவர்களின் மனம் மற்றும் குணநலத்திற்கு ஏற்ற வாறு வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் அழிவதால், உங்களுக்கு இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் எக்கச்சக்க லாபத்தை அடைவீர்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக செயலாற்றி மக்களின் நன்மதிப்பை பெரும் சூழல் உண்டாகும். சிலருக்கு கவுரவ பதவிகளும் கிடைக்கும். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். நீங்கள் கேட்ட விலைக்கு உங்களின் விளைபொருட்கள் வியாபாரிகளாலும், பொதுமக்களாலும் வாங்கப்படும். உங்களின் விவசாயக்கடன், மற்றும் பயிர்க்கடன் போன்றவற்றை திரும்ப அடைத்து விடக்கூடிய பொருளாதார பலத்தை பெறுவீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைபேறில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.

Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 இருப்பதால் ஏற்படும் பலன்கள்

- Advertisement -

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகளவு தனவரவுகள் இருக்கும். வீட்டில் சுபிட்சம் பொங்கும். பிரிந்து போன உறவுகளும் நண்பர்களும் உங்களை தேடி வந்து சொந்தம் பாராட்டுவார்கள். குழந்தைகள் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவீர்கள். மாணவர்கள் தங்களின் கடின முயற்சி காரணமாக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள். உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு தொகையை ஆன்மீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-10-2018 வரை இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இக்காலகட்டத்தில் பணவரவு பெரிய அளவில் லாபமும் நஷ்டமுமில்லாமல் சராசரியான அளவில் இருக்கும். சிலநேரம் எதிர்பாராத திடீர் தனவராவுக்கும் வாய்ப்புண்டு. திருமணமான தம்பதிகளிடையே சிறிய கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படும். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளிநாடுகள் செல்ல முயல்பவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் பலன்கள்

பணம் பல வழிகளிலில் உங்களை வந்தடையும். திருமணம் முயற்சிகளில் சிறந்த பலன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். கூட்டாளிகளின் சிறந்த ஒத்துழைப்பால் தொழிலில் சிறந்த லாபம் கிடைக்கும். குடும்பத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியடையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

Guru peyarchi palangal Kadagam
Guru peyarchi palangal Kadagam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் பலன்கள்

மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் பல அலைச்சல்கள், தாமதங்களுக்கு பிறகு வெற்றியுண்டாகும். பணவரவுகள் நன்றாக இருக்கும். கொடுத்த கடன்களை திரும்ப பெற இயலும். வெளிநாட்டு தொடர்புடைய விடயங்களில் நல்ல பலன்கள் கிட்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

உங்கள் உடல் மற்றும் மனோபலம் கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசாங்க வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொலைதூர பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு சிறிது தேடல்களுக்கு பின்பு தகுதியான வேலை கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எல்லாவகையிலும் முன்னேற்றங்கள் இருக்கும். எண்ணிய எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையும், சுபிட்சங்களும் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு 13-2-2019 அன்று ஏற்படும் ராகு-கேது கிரகங்களின் பெயர்ச்சி சிறிது பாதகத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மந்தாரை மலரை கொண்டு ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கேது பகவானின் அருள் கிட்ட தினமும் விநாயக பெருமானை வழிபட வேண்டும்.