குரு பெயர்ச்சி பலன்கள் 2019 மேஷம்

Guru peyarchi palangal mesham

மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்.)

Mesham Rasi

இதுவரை பல தோல்விகளை சந்தித்து மன சோர்வடைந்த மேஷ ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது சிறப்பாகவே உள்ளது. 29.10.2019 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் வருகிறார். அதன் காரணமாக நீண்ட நாள் நடைபெறாமல் இருக்கும் சுப நிகழ்ச்சிகளெல்லாம் தற்போது கூடி வரும். வாழ்வில் புதிய யுக்திகள் கொண்டு ஏற்றம் பெற தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் செயலாற்றுவீர்கள்.

குரு பகவானின் நேரடி பார்வை உங்களின் மீது பதிவதால் அழகும் ஆரோக்கியமும் பெறுவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் தடையின்றி நிகழும். இனி எப்போது மலர்ந்த முகத்தோடே காணப்படுவீர்கள். சோகங்கள் நேநேகி புது உற்சாகம் பிறக்கும்.  வாகன யோகம் உண்டாகும்.

உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை இருந்த குழப்பமும் தடுமாற்றமும் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் தொழில், திருமணம், கல்வி, பாகப்பிரிவினை போன்ற நல்ல காரியங்கள் சுமுகமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.

Guru peyarchi palangal Mesham
Guru peyarchi palangal Mesham

தொழில்:

- Advertisement -

தொழில் செய்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்லதொரு லாபத்தை தரும். தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் கடன் கிடைக்கும். அதே போல சொந்த தொழில் செய்யாமல் மற்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வெளி நாடு செல்லும் யோகம் உண்டாகும். சம்பளம் மற்றும் தொழிலில் வரும் லாபத்தை கொண்டு புதிய வீடு வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் கல்வி கற்பவர்களுக்கு அங்கேயே சிறப்பான ஒரு வேலை கிடைக்கும்.

கல்வி:
மாணவர்களை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி சிறப்பாகவே உள்ளது. கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் அதை எழுதி தேர்ச்சி பெறுவார்கள். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கை கூடி வரும். அதே போல இயல்பாகவே மாணவர்களுக்கு கல்வியின் மீது இருந்த நாட்டம் அதிகரிக்க துவங்கும். அதன் மூலம் அவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து சாதிப்பார்கள்.

Guru peyarchi palangal Mesham
Guru peyarchi palangal Mesham

பொருளாதாரம்:

இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். குருவானவர் 9 ஆம் இடத்தில் அமர்ந்து 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொத்து ரீதியான பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். கடனாக பெற்றிருந்த பணத்தை இந்த காலகட்டத்தில் அடைப்பீர்கள். அதே போல கடன் கொடுத்துவிட்டு பல நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:

அசுவினி நட்சத்திரகாரர்களுக்கு விரையங்கள் அதிகமாக வாய்ப்புள்ளது. அதே போல உடல் நலனில் அக்கறை கொண்டு வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பரணி நட்சத்திரக்காரர்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். கார்த்திகை 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த வகையிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. திருமண செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டி வரும்.

பரிகாரம்: ஆலங்குடிக்குச் சென்று குரு பகவானை தரிசித்து வருவது நல்லது. அதே போல திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது நல்லது.