குரு பெயர்ச்சி பலன்கள் 2018 மிதுனம்

guru-peyarchi midhunam

மிதுனம்:

midhunam

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு 04-10-2018 அன்று குருபகவான் மிதுன ராசிக்கு 6 ஆம் இடத்தில் பெயர்ச்சியாக இருப்பதால் மறைமுக எதிரிகள் உண்டாவார்கள். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்படும். பெரும் தொகையை கடனாக கொடுத்தவர்கள் அதை சுலபத்தில் வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். பண விவகாரங்களில், நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

வயிறு கோளாறுகள் சம்பந்தமான பிரச்னைக்களால் அடிக்கடி அவதியுறுவீர்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகளால் பாதிப்படையும். மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதாலும் உடல் நலம் பாதிக்கும். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் பிறருக்கு நல்லது செய்ய முயற்சித்தாலும் அது உங்களுக்கே அவப்பெயரை சம்பாதித்து தரக்கூடிய நிலை உண்டாகும். பிறருக்கு முன்ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள்.

பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகளை செய்வார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபமில்லையென்றாலும் முதலீடுகளை திரும்ப பெறும் அளவிற்கு வருவாய் இருக்கும். விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் இருக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.

Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

- Advertisement -

பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். பெரிய அளவு தொகைகளை பிறருக்கு கடனாக தருவதை தவிர்க்கவும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். வியாபாரங்களில் போட்டி கடுமையாவதால் சற்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

வாகனங்களில் பயணிக்கும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் ஆகும். அலைச்சல்கள், மன அழுத்தம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு ஆறுதலை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை பெறுவார்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியமாகும். பிறரின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தம்பதிகளுக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறையும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகளை பெறலாம். உறவினர்களால் மகிழ்ச்சியும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களால் நல்ல லாபங்களை பெருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

குடும்பத்தில் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஒற்றுமை குறையாது. எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரங்களில் லாபம் பெருகும். தீர்த்த யாத்திரைகளை சிலர் மேற்கொள்வார்கள். எதிர்பாராத பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாறுதல்கள் கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும். மனம் சற்று குழப்ப நிலையிலேயே இருக்கும். பிறருடன் பேசும் போது வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும்.

பரிகாரம்

குரு பகவான் பாதகமான பலன்களை தரும் நிலையில் இருப்பதால் வியாழக்கிழமைகள் தோறும். குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலையை சாற்றி, மஞ்சள் நிற பூக்களை வைத்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதால் குரு பகவானின் ஆசிகள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபட்டு வருவது நல்லது.