குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 தனுசு

guru-peyarchi

எதிலும் தனித்து நிற்பவர்களே!

உங்கள் ராசிக்கு லாபஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

dhanusu

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

- Advertisement -

குருபகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால், மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி உண்டு.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் சலசலப்புகள் உண்டாகும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னைகளால் கலக்கம் உண்டாகும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். சிலர் வீடு மாறவேண்டிய நிலையும் ஏற்படும். முதுகுத்தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருக்கவும். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக வருவார்கள். அரசு கெடுபிடிகள் தளரும். நகை, ஆடை, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் வகைகளில் லாபம் உண்டாகும்.

guru

உத்தியோகத்தில் மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மாணவ மாணவிகளே! சக மாணவர்களால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும்.

கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவராமல் இருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாவதற்கு சில முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி, தோல்விகளால் துவண்டுக் கிடந்த உங்களை சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.