குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கடகம்

guru-peyarchi kadagam

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். எதிலும் பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் – மனைவிக்கு இடையில் சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

kadagam

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

- Advertisement -

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தாயாருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

உங்களின் ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீது வீண்பழி சுமத்தப்படும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களை நம்பி ஏமாறவேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

 

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். என்னதான் அதிக சம்பளம் கொடுத்தாலும் வேலையாட்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராடவேண்டி இருக்கும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்கள், லாட்ஜிங் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். அதிகாரிகளில் ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், மற்றொரு தரப்பினர் குறை கூறிக்கொண்டே இருப்பார். தகுதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் குறித்து ஆதங்கப்படுவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். சலுகைகள் தாமதமாகும்.

guru

மாணவ – மாணவிகளே! படிப்பில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தகுதி பார்த்து நட்பு கொள்ளவும். கலைத்துறையினரே! சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம் (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும் குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.