குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மகரம்

guru-peyarchi

தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்வதால், வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்காது. பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.

magaram

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.

- Advertisement -

குருபகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டாகும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உத்தி யோகத்தில் விரும்பத் தகாத இடமாற்றம் வந்து செல்லும்.

உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம்1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

உங்களின் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், மனதில் ஒருவித அச்ச உணர்வு வந்து செல்லும். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். அறிமுகம் இல்லாத தொழில்களில் முதலீடு செய்யவேண்டாம். வியாபார விஷயங்களை சமாதானமாகப் பேசி முடித்துக் கொள்வது நல்லது.சிமென்ட், மரம், கடல்வாழ் உயிரினங்கள், இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

guru

உத்தியோகஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மறைமுக எதிர்ப்புகள், வீண் பழிச்சொல், திடீர் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தினமும் நடத்தும் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். விளையாட்டுத்தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுக்கவும். மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களை கொஞ்சம் செம்மைப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:புனர்பூசம் நட்சத்திர நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.