குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – விருச்சிகம்

guru-peyarchi-palan-viruchigam

விருச்சிகம் ராசி : (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

viruchigam-rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்தில் இருந்து கொண்டு 7, 9, 11 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே விருச்சிக ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு சுமாரான பலன்களையே தரும். ஒருவர் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்டு விட்டு பின் பதில் கூறினால் மிகவும் நல்லது. தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்கள் போன்றவை மன அமைதியை சீர்குலைக்கும். வெளி உலகம் பற்றிய புரிதல் மேம்படும் காலம் இது. உங்களுடைய புத்திசாலித்தனம், சாதுரியமான நடவடிக்கை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். உங்கள் ராசியினர் பெரும்பாலும் மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவசர குடுக்கை என்கிற பெயரை மட்டும் மாற்றிக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகம் உங்கள் ராசிக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு உத்தியோக ரீதியான பிரச்சனைகள், சங்கடங்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும். மேல் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்கள் உண்டாகும். உங்களுடைய சுய மரியாதைக்கு பங்கம் நேரும் பொழுது பொறுமையை இழந்து விடுவீர்கள். எனவே உத்தியோகத்தை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி ஆனது அதிக பொறுமையுடன் இருப்பதைக் குறிக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய நபர்களின் அறிமுகம், பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இருப்பினும் உங்களுடைய கடின முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைப்பதில் தாமதமாகும்.

Guru peyarchi palangal Viruchigam
Guru peyarchi palangal Viruchigam

பொருளாதாரம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்களை காண முடியும் எப்போதோ கொடுத்து வைத்திருந்த பணம் இப்போது வசூலாக கூடிய அல்லது கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான கடன்கள் படிப்படியாக குறையும்.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளுக்கு இடையே உங்களுக்கு இருக்கும் நெருக்கம் இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு இன்னும் அதிகமாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் உங்களுடைய பங்கு மற்றும் ஒத்துழைப்பு முழுமையாக கொடுப்பீர்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய வரவுகள் குடும்பத்தில் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் அனைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். வருகின்ற இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகமான காலமாக அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.

- Advertisement -
Guru peyarchi palangal Virichigam
Guru peyarchi palangal Virichigam

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பாகவே இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல்நிலை பாதிப்புகள் கூட படிப்படியாக நீங்கி விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு நல்ல வழி பிறக்கும். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சரியான உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவியாக இருக்கும்.

guru-bhagavan

செய்ய வேண்டிய பரிகாரம்:
பசுக்களுக்கு தீவனம் கொடுத்து வர வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் ராசிப்படி குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வர யோகம் பெறலாம். வயதான முதியவர்களுக்கு மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்து பாருங்கள் நல்லது நடக்கும்.

குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – துலாம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.