குருவின் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

guru astrology symbol
- Advertisement -

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரனியாக இருப்பவர் இந்த குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.

இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார் இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மாற்றம் உண்டு.

- Advertisement -

குரு பகவானின் இந்த இடமாற்றம் ஆனது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையப் போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது உங்களுக்கு பல நல்ல சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அதிகரிக்கும். பேச்சு திறமையால் உங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள்.

- Advertisement -

விருச்சக ராசி

குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது உங்களுடைய வாழ்க்கையில் இருந்த அனைத்து சிக்கல்களையும் தீர்க்கக் கூடிய காலமாக அமையும். திருமண வாழ்க்கையில் இது வரையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் புதிய மாற்றங்கள் உருவாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி அடைவீர்கள். மற்றவர்களிடத்தில் நற்பெயரும் மதிப்பும் பெறுவீர்கள் பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான பலன்கள் பெறுகிறார்கள். குறிப்பாக அவர்களின் நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வேலை தொடர்பான பயணங்கள் நல்ல முயற்சி தரும் . நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவை பூர்த்தியாகும். திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

இதையும் படிக்கலாமே: குரோதி தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெறக் கூடிய ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்டவை தான் இந்த கருத்தில் உள்ள தகவல்கள். இதிலும் அவரவர் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தை நினைவில் கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -