குருபகவானால் யோகம் பெரும் ராசிகள்

guru astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் நவகிரகங்களின் ஒவ்வொரு மாற்றமும் 12 ராசிக்கும் பலவிதமான மாற்றங்களை கொடுக்க வல்லது. அந்த வகையில் நவகிரகங்களில் மங்கல கிரகமாக திகழக் கூடியவர் குருபகவான். இவர் தன்னுடைய இடப்பெயர்ச்சியின் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கியுள்ளார். அது எந்த ராசிகள் என்பதை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குருவால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்

பொதுவாகவே ஒருவருக்கு குருவின் பார்வை பரிபூரணமாக கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் குருவானவர் செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் வேலை வாய்ப்பு என அனைத்தையும் தரக் கூடியவராக திகழ்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும் இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை குரு பகவான் ஏற்படுத்தி உள்ளார். அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

துலாம் ராசி
குருபகவானின் இடப்பெயர்ச்சி யால் துலாம் ராசிக்காரர்களுக்கும் பல யோகங்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழக் கூடிய யோகம் தேடி வரும். வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் மொத்தத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறக் கூடிய காலமாக இது அமையும்.

- Advertisement -

தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கும் குருபகவான் பல அதிர்ஷ்டங்களை வாரி வழங்கு உள்ளார். இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இவர்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் அதில் முன்னேற்றமும் கிடைக்கும். இது வரை தேங்கி கிடந்த பண வரவு எல்லாம் தேடி வந்து கிடைக்கக் கூடிய நேரம் இது.

கடக ராசி
கடக ராசி காரர்கள் குரு பகவானின் பெயர் செய்ய பல அதிர்ஷ்டங்களை பெற உள்ளார்கள். குறிப்பாக வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகளில் நல்ல லாபத்தை பெறலாம் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் யோகம் பெரும் ராசிகள்

குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் இந்த ஆண்டு அதிர்ஷ்டத்தை பெறக் கூடிய ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான். இவற்றிலும் அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவலை மேற் கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -