கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நெய் பாயாசம் மணக்க மணக்க வீட்டிலேயே எப்படி செய்வது?

guruvayur-nei-payasam
- Advertisement -

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூர் எனும் ஊரில் புகழ் பெற்று விளங்கும் கோவில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ஆகும். பூலோக வைகுண்டம் ஆக புகழ் பெற்ற இத்தலம் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணனாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருத்தலம் வைணவர்களால் பெரிதாக போற்றப்பட்டு வருகின்றது. இங்கு கொடுக்கப்படும் பிரசாதங்கள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. அதில் மணமணக்கும் நெய் பாயசம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடைகளில் இதனை கட்டாயம் வாங்கி செல்வது உண்டு. இந்த மணமணக்கும் தெய்வீக நெய் பாயாசம் வீட்டிலேயே எப்படி செய்வது? அதைத் தெரிந்து கொள்ள இந்த பதிவை மேலும் பின் தொடர்வோம்.

‘குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நெய் பாயசம்’ செய்ய தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி – ஒரு கப், வெல்லம் பொடித்தது – இரண்டரை கப், நெய் – 5 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் தூள் – சிட்டிகை அளவிற்கு, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி.

- Advertisement -

‘குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நெய் பாயசம்’ செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காயை உடைத்து உங்களால் எவ்வளவு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை தூளாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய்களை பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் வாணலி ஒன்றை வைத்து காய விடுங்கள். பின்னர் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சுத்தமான பசு நெய் மணக்க மணக்க விட்டுக் கொள்ளுங்கள். நெய் காய்ந்ததும் நீங்கள் துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய்களை சேர்த்து சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

jeeraga-samba-rice

சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் மூன்று பங்கு அளவிற்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து கொள்ளுங்கள். பொடித்து வைத்த வெல்லத்துடன் அரை கப் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டினால் மண் துகள்கள், திப்பிகள் ஏதாவது இருந்தால் நீங்கிவிடும். அதன் பிறகு அடுப்பில் வைத்து பாகு காய்ச்ச வேண்டும்.

- Advertisement -

வெல்லம் உருகி பாகு பதம் வந்தவுடன், நீங்கள் குக்கரில் வேக வைத்த சாதத்தை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்து திரண்டு வரும் பொழுது நெய்யில் வதக்கி எடுத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து ஏலக்காய்த் தூள் சிட்டிகை அளவிற்கு போட்டு கரண்டி வைத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்து பாயாசம் பதம் வந்தவுடன் இறக்கி பரிமாற வேண்டியது தான்.

nei-payasam0

சுடசுட நெய் மணக்கும் இந்த பாயாசம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை செய்யக்கூடியது. நம் வீட்டிலேயே குருவாயூர் கிருஷ்ணன் அருள் பெற இந்த பாயாசத்தை நைவேத்தியம் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை புதன் கிழமைகளில் வழிபட எல்லா நலன்களையும், வளங்களையும் பெறலாம். 5000 வருடங்களுக்கும் மேல் பழமையான இந்த கிருஷ்ணரை நேரில் கண்டு ஒரு முறை தரிசனம் செய்ய முடிந்தால் சென்று தரிசனம் செய்து வாருங்கள், நன்மைகள் நடக்கும்.

- Advertisement -