இன்று சருமத்தில் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கும், முடி உதிர்வு ஏற்படுவதற்கும் முதல் காரணம் நம்முடைய சுற்றுச்சூழல் தான். மாசு படிந்த காற்று. அது மட்டும் இல்லாமல் புகை சூழ்ந்த சாலை என்று நிறைய கஷ்டங்களை நாம் எதிர்கொள்கின்றோம். குறிப்பாக தினமும் வேலைக்கு சென்று வரக்கூடிய பெண்கள் ஆண்களுக்கு இந்த பொல்யூஷன் காரணமாக ஆரோக்கியத்திலும், அழகிலும் அதிக குறைபாடு ஏற்படுகிறது. அந்த வகையில் உங்களுடைய தலையில் அதிகப்படியான தூசி படிவதால், சுண்டு அரிப்பு அழுக்கு போன்ற பிரச்சனைகளின் மூலம் தலை முடி உதிரும்.
முகத்தில் தூசு படிவதால் தேவையற்ற கரும்புள்ளிகள், முகப்பருக்கள் தோல் சுருக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒரு ஸ்ப்ரேவை வீட்டிலேயே தயாரிக்கலாம். எளிமையாக சுலபமாக நிறைய செலவில்லாமல். அது எப்படி என்பதை பார்த்து விடுவோமா.
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள். சுத்தமான தண்ணீர் 1 பெரிய சோம்பு, வேப்பிலை 3 கைப்பிடி அளவு, 2 ரோஜா பூ, அவ்வளவுதான் (பன்னீர் ரோஜாவாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.) அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதி வந்ததும், வேப்ப இலைகள், ரோஜா இதழ்களை, போட்டு ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்கட்டும். அதன் பின்பு மூடியை எடுத்து ஒரு கரண்டியை வைத்து இதை நன்றாக கலந்து விட்டு, மீண்டும் மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீர் அப்படியே நன்றாக ஆரட்டும்.
ஆறிய பின்பு தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இந்த தண்ணீர் 7 நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும். இந்த தண்ணீரை நாம் எப்படி பயன்படுத்துவது. தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு வருவோம் அல்லவா. அந்த சமயம் லேசாக ஈரம் இருக்கக்கூடிய தலையில் ஸ்கேல்பில் படும்படி இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு குளித்த சுத்தமான உங்க முகத்தின் மேல், இந்த ஸ்பிரேவை லேசாக அடித்து அப்படியே விட்டுவிடுங்கள். இரண்டு நிமிடத்தில் உங்களுடைய முகம் அந்த தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். தினமும் இந்த டிப்சை நீங்கள் பின்பற்றலாம். உங்களுடைய அழகுக்கு இந்த ஸ்ப்ரே கேரண்டி. எந்த ஒரு அழுக்கும் தூசு தூம்பும் உங்கள் சருமத்தையும், தலை முடியையும் சேதப்படுத்தாது. தினமும் தலைக்கு குளிக்காதவர்கள் பரவாயில்ல. அப்படியே எண்ணெய் தலையாக இருந்தாலும் லேசாக இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொள்ளலாம்.
இவ்வளவு சுலபமான ரெமிடி என்று யோசிக்காதீங்க. இதில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கூடிய சத்தும் உங்கள் தலைமுடியை பாதுகாக்க கூடிய சத்தும் அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக இது ஒரு கிருமி நாசினியாக செயல்படும். முயற்சி செய்து பாருங்கள். இதிலிருந்து வெளிவரக்கூடிய அந்த ரோஜா பூ இதழின் வாசம், உங்களை நாள் முழுவதும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.