ஹேர்டை வேண்டாம்! நிரந்தரமாக உங்களது தலைமுடியை கருப்பாக மாற்ற, இயற்கையான இந்த 2 பொருள் போதும்!

naraimudi-neenga

நம்முடைய தலை முடியை கருப்பாக மாற்றிக்கொள்ள பலபேர் ஹேர்டை தான் பயன்படுத்தி வருகின்றோம். இதன்மூலம், பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படும் என்று தெரிந்தும், வேறு வழியில்லாமல் பயன்படுத்தி வருகின்றோம் என்று சொன்னால், அது பொய்யாகாது. இளநரை இருந்தாலும் சரி. பித்த நரையாக இருந்தாலும் சரி. அல்லது வயதான பின்பு வந்த நரையாக இருந்தாலும் சரி. இவை அனைத்தும் வராமல் தடுக்க, இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும். முடியை கருப்பாக்க, நமக்குத் தேவைப்படும் அந்த இரண்டு பொருள் என்ன? அதை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

white hair

நம்முடைய தலை முடியை கருப்பாக மாற்ற போகும் அந்த பொருள் மருதாணி இலை தூள், அவுரி இலை பொடி. இந்த இரண்டு பொருட்களும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எந்த முறையில் நீங்கள் இதை பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் சந்தேகமே. இப்படி மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! இரண்டே வாரத்தில் நல்ல பலனை கண்கூடாக பார்க்கலாம்.

நாட்டு மருந்து கடைகளிலேயே, மருதாணி பொடி, அவுரி இலை பொடி, கிடைக்கும். இதை இரண்டையும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு, உங்களுக்கு தேவையான அளவு மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் பேஸ்ட் போல் கலந்து ஊற வைத்து விட வேண்டும். 5 மணிநேரம் ஊறிய பின்பு அந்த மருதாணி கலவையை உங்களது தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். அதாவது முடியின் வேர் பகுதியில் இருந்து, அடி நுனி முடி வரை நன்றாகத் தடவி, தலை முடியை கொண்டை போட்டு கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

maruthani-powder

அரை மணி நேரம் வரை உங்களது தலையில் மருதாணி விழுது அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு நீங்கள் எப்படி தலைக்கு குளிப்பீர்களோ, அதன்படி நன்றாக தலைக்குக் குளித்துவிட்டு, தலையை நன்றாக உலர வைத்து விடவேண்டும்.

- Advertisement -

இரண்டாவது கட்டமாக, அவுரி இலை பொடியை எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கரைத்து உங்களது தலை முழுவதும் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின்பு மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டும். அவுரி இலை பொடியை, தண்ணீரில் கலந்த உடனேயே தலையில் தடவிக் கொள்ள வேண்டும். நீங்கள் இதை செய்த முதல் முறையே, உங்களது முடியில் வெள்ளை குறைந்து இருப்பதை காண முடியும்.

avury-power

வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இதை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில், நரை முடியானது நிரந்தரமாக கருப்பு நிறமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான வேலையும்  கொஞ்சம் சிரமம் தான். ஆனால், எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாமல், நிரந்தர தீர்வை கொடுக்கும் ஒரு வழி என்று கூட சொல்லலாம். முயற்சி செய்து பாருங்கள்! உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
“S” என்ற முதல் எழுத்தில், உங்கள் பெயர் ஆரம்பித்தால், உங்களுடைய குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Narai mudi karupaga mara tips in Tamil. narai mudi poga tamil. narai mudi karupaga. Narai mudi karupaga oil