1 சொட்டு இந்த தண்ணீரானது தலையில் எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்தில் எல்லாம் ஒரு நாளைக்கு 1 இன்ச் முடி வளர்வது நிச்சயம்.

hair5
- Advertisement -

முடி வளராமல் இருப்பதற்கும், முடி உதிர்வதற்கும், முடியில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளது. அத்தனை காரணங்களுக்கும் சேர்த்து இன்னைக்கு நாம் ஒரு ஹேர் ஸ்ப்ரே தயார் செய்யப் போகின்றோம். இந்த ஹேர் ஸ்ப்ரே படும் இடத்தில் நிறைய முடி வளர்வது உறுதி. முடியின் வேர்க்கால்கள் வலிமையாக இல்லை, தலையில் அரிப்பு இருக்கிறது, பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறது, கண்டுபிடிக்க முடியாத இன்ஃபெக்சன் இருக்கிறது, அதனால் முடி கொட்டுகிறது என்பவர்களும் இந்த குறிப்பை பின்பற்றலாம். முடி அடர்த்தியாக நெருக்க நெருக்கமாக வளரவில்லை, இளநரை உள்ளது என்பவர்களும் இந்த குறிப்பை பின்பற்றலாம்.

எனக்கு தலையில் நிறைய இடத்தில் வழுக்கை உள்ளது. வழுக்கையாக இருக்கும் இடத்தில் முடி சீக்கிரம் வளர வேண்டும் என்பவர்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். பல மடங்கு முடி அடர்த்தியை, முடி வளர்ச்சியை கொடுக்கப் போகும் சிம்பிளான ஹேர் ஸ்பிரே, ஹேர் சீரம் எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ரெமிடி உங்களுக்காக இதோ.

- Advertisement -

முதலில் இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் டபுள் பீன்ஸ். கிட்னி பீன்ஸ் என்று சொல்லுவார்கள். கொஞ்சம் பெரிய அளவில் கிட்னி போலவே வெள்ளை நிறத்தில் கடைகளில் விற்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே பத்து பதினைந்து கிட்னி பீன்ஸை, 1/4 லிட்டர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த பீன்ஸ் நமக்கு தேவை கிடையாது. வேகவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். அந்த பீன்ஸை ஊற வைத்த தண்ணீரை மட்டும் குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து பீன்ஸ் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் கருஞ்சீரகம் 3 ஸ்பூன், 3 வெங்காயத்தின் தோல்கள், 3 முழு பூண்டுக்கு மேலே உள்ள தோல்கள், கிராம்பு 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் வரை இந்த தண்ணீர் கொதிக்கட்டும். 1/4 லிட்டர் தண்ணீர் அளவில் குறைந்து சுண்டி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு ஒரு மணி நேரம் ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 லிருந்து 10 நாட்கள் கெட்டுப் போகாது. தினமும் இந்த ஸ்ப்ரேவை நீங்கள் தலையில் அடித்துக் கொள்ளலாம். தவறில்லை. வீட்டில் இருந்தால் இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து பிறகு ஃபேன் காற்றில் காய வைத்துக் கொள்ளுங்கள்‌. கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

வெளியே செல்ல வேண்டும் இந்த ஹேர் ஸ்ப்ரேவில் வாடை வெளியே வீசும் என்ன செய்வது. தலைக்கு குளித்து தான் ஆக வேண்டும் என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம் தான். மாலை வீட்டிற்கு வந்தவுடன் இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டு மறுநாள் காலை கூட தலைக்கு குளித்துக் கொள்ளலாம். தினம் தினம் இந்த ஸ்ப்ரேவை தொடர்ந்து போட்டு வர ஊட்டச்சத்து அனைத்தும் உங்கள் ஸ்கேல்பில் நன்றாக இறங்கி ஒரு சில நாட்களில் முடி வளர்ச்சி பல மடங்கு அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

ஏனென்றால் இதில் நாம் சேர்த்திருக்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய சத்துக்கள் நிறைந்த பொருட்கள் தான். குறிப்பாக இளநிறை உள்ளவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து வந்தால் இளநிறை குறையும். கருகருவென முடி வளரத் தொடங்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. அழகான முடி அவசியம் கிடைப்பது உறுதி.

- Advertisement -