அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்று பார்க்கும் பொழுது முதல் இடம் பிடிப்பது நரைமுடி பிரச்சனைதான். இந்த நரைமுடி என்பது இளம் வயதில் வந்து விட்டால் அவர்களை வயதானவர்கள் போல் கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதே நரைமுடி முதிர்ந்த பிறகு வராமல் இருந்தால் அவர்களை இளமையாக நினைக்கிறார்கள். அதனால் தான் இன்றைய காலத்தில் ஹேர் டைக்கென்று பல டிமாண்ட் வந்துவிட்டது. நரை முடியை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் பல பக்க விளைவுகளை சந்தித்தாலும் வயதாகிவிட்டது என்ற தோற்றத்தை வெளியில் காட்டாமல் இருப்பதற்காக இந்த கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பலரும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதை தவிர்த்து விட்டு வீட்டிலேயே எளிமையாக கிடைக்கக் கூடிய சில பொருட்களை வைத்து நாம் ஹேர் மாஸ்க் தயார் செய்து தடவுவதன் மூலம் படிப்படியாக நம்முடைய நரைமுடி பிரச்சனை என்பது குறைய ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தல் பிரச்சனையை குறைத்து முடியை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது. இந்த ஹேர் மாஸ்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
முதலில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். இதை எந்த அளவிற்கு நாம் வருகிறோமோ அந்த அளவிற்கு முடிக்கு கருமையைத் தரக்கூடிய ஆற்றல் இருக்கிறது. வறுத்தெடுத்த இந்த கருஞ்சீரகத்தை ஆற வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை தண்ணீரில் அலசிவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வறுத்து வைத்திருக்கும் கருஞ்சீரகத்தையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும். இதற்காக நாம் தண்ணீரை பயன்படுத்தாமல் தேங்காய் பாலை உபயோகப்படுத்தி அரைக்க வேண்டும். ஒரு கிளாஸ் அளவிற்கு தேங்காய் பாலை ஊற்றி இந்த விழுதை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி சாரை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்வோம். இந்த சாரை பயன்படுத்தி நாம் ஹேர் மாஸ் தயார் செய்யப் போகிறோம்.
இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுலில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு கரிசலாங்கண்ணி பொடியை போட்டு அதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு இந்த சாரை ஊற்றி கலக்க வேண்டும். இது பேஸ்ட்டாக ஆன பிறகு தலையின் வேர்க்கால்களில் நன்றாக தடவி விட்டு தலைமுடி முழுவதும் வேரிலிருந்து நுனி வரை ஒவ்வொரு முடியாக எடுத்து இந்த ஹேர் மாஸ்கை தடவ வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் தலையை அலசி விட வேண்டும்.
இதில் இருக்கக்கூடிய கருஞ்சீரகமும், கருவேப்பிலையும், கரிசலாங்கண்ணியும் தலை முடியின் கருமையை காக்க உதவுகிறது. இளநரை பிரச்சினை இருப்பவர்களுக்கு அது பரவவிடாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்தல் பிரச்சினையை நீக்கி முடியை அடர்த்தியாகவும் வளரச் செய்கிறது. இதை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தினால் தான் அது படிப்படியாக இளநரை பிரச்சினையை தவிர்த்து முடியை கருமையாக்க உதவும்.
இதையும் படிக்கலாமே: முடி வேகமாக வளர உதவும் எண்ணெய்
இயற்கையான பொருட்களை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் அது மெதுவாக பலனை தந்தாலும் நிரந்தர பலனை தரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது என்பதை கருத்தில் கொண்டு செயலாற்றலாம்