- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி கொட்டுவது நிற்க மாஸ்க்

முடி கொட்டுவது நிற்க மாஸ்க்

- Advertisement -

நம் உணவு முறை மாற்றத்தினால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் தலைமுடி வேகமாக கொட்டுகிறது. கொட்டும் தலை முடியை எப்படி தடுத்து நிறுத்துவது? முடி கொட்டுவது நின்று அடர்த்தியாக முடி வளர கட்டாயம் இந்த ஹேர் மாஸ்க் அனைவரும் போட்டு பார்க்கலாம். தொடர்ந்து ரெண்டு வாரம் போட்டு பார்த்தாலே, நல்ல ரிசல்ட் கிடைக்கும். இயற்கையான இந்த ஹேர் மாஸ்க் யார் வேண்டுமானாலும் போடலாம். முடி கொட்டுவது நிற்க ஹேர் மாஸ்க் எப்படி போடுவது? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

தலைமுடி கொட்டுவதை தடுத்து நிறுத்தி முடியை வேர்க்காலில் இருந்தே ஊட்டச்சத்துடன் கொண்டு வருவதற்கு துணை புரிவது கற்றாழை! கற்றாழையில் இயற்கையாகவே தலைமுடியை மிருதுவாக்கும் தன்மை உண்டு. மேலும் இதில் இருக்கும் விட்டமின்கள் தலை முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கும். வலுவிழந்த கேசத்திற்கு வலிமையை கொடுக்கக் கூடிய அற்புதமான மூலிகை கற்றாழை!

- Advertisement -

இந்த கற்றாழை ஜெல்லை பிரெஷ் ஆக அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு சுத்தம் செய்து அலசி பின்னர் பயன்படுத்த வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் வறண்ட கேசத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். தலைமுடி எப்பொழுதும் வறண்டு போகக்கூடாது. காற்று மாசுவினால் தூசுகள் சேர்ந்து தலைமுடி வறண்டு போவதால், வேர்க்கால்கள் பலம் இழந்து காணப்படுகிறது.

பின்னர் இதனுடன் அரை வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் போதுமான அளவிற்கு பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும் பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. இது தலை முடிக்கு நல்ல ஊட்டச்சத்து கொடுத்து, முதலில் உதிர்வதில் இருந்து தடுத்து நிறுத்துகிறது. பின்பு உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகளை முளைக்க செய்ய தூண்டுகிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை கற்றாழையுடன் சேர்ப்பதால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.

- Advertisement -

பின்னர் கடைசியாக இந்த கலவையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் லாக்டிக் ஆசிட் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் சென்று அழுக்குகளை வெளியில் கொண்டு வருகிறது. மூடி இருக்கும் துவாரங்களை திறந்து உள்ளுக்கு சென்று ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து கூழ் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீர்க்கும் எலுமிச்சம் பழ பரிகாரம்

பின்னர் இந்த பேஸ்டை தலைமுடியில் வேரில் இருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி தடவி முடியை கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியின் அடர்த்திக்கு ஏற்ப இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் நன்கு காய விடுங்கள். முடி காய்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலசி விடுங்கள். தயிர் சேர்த்து இருப்பதால் சிலருக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் தயிரை தவிர்த்து மற்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தலாம். தொடர்ந்து இரண்டு வாரம் இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்கள், தலைமுடி உதிர்வது உடனே நின்று உதிர்ந்த இடத்தில் மீண்டும் பேபி ஹேர் வளர துவங்கும். அற்புதமான ரிசல்ட் கொடுக்கக்கூடிய இந்த ஹேர் மாஸ்க் வீட்டிலேயே எளிதாக தயாரித்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

சற்று முன்