கருமையான அடர்த்தியான கூந்தலை பெற

venthayam karunjeeragam
- Advertisement -

நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தலைமுடி உதிர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படும். எந்தளவுக்கு தலைமுடி உதிர்தலுக்கு காரணங்கள் இருக்கிறதோ அதேபோல்தான் இளநரை பிரச்சினைக்கும் பல காரணங்கள் இருக்கிறது. இந்த காரணங்களை நாம் சரி செய்வதற்காக பல வழிமுறைகளை மேற்கொண்டாலும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அடர்த்தியான கருமையான கூந்தலை பெற உதவும் ஹேர்பாக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது உடல் சூட்டின் காரணமாக அதிக அளவில் ஏற்படும். அப்படிப்பட்ட உடல் சூட்டை தணிப்பதற்கும் தலைக்கு குளிர்ச்சியை தருவதற்கும் பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களில் நம்முடைய உடலுக்கு ஒத்துக்கொள்ளும் அளவிற்கு இருக்கக்கூடிய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்தல் என்பது சரியாகும். இந்த தலைமுடி உதிர்தலை சரி செய்யும் பொருளோடு இன்னும் ஒரே ஒரு பொருளை சேர்க்கும் பொழுது நம்முடைய தலைமுடி கருமையாக மாறுவதை நம்மால் உணர முடியும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக உடல் சூட்டை தணிக்க கூடிய பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வெந்தயம். வெந்தயத்தை நாம் ஊறவைத்து சாப்பிடுவோம். அப்படியேவும் சாப்பிடுவோம். அப்படிப்பட்ட வெந்தயத்தை நம்முடைய தலைமுடிக்கு நாம் பயன்படுத்தும் பொழுது உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் பிரச்சனை என்பது குறையும். இதை பலரும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள்.

இருப்பினும் இந்த வெந்தயத்தை தலையில் தேய்த்து ஊற வைத்து குளிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு சளி பிடிக்கும் தன்மை கூட ஏற்படும். அந்த சளி பிடிக்கும் தன்மையை நீக்குவதற்கும் அதே சமயம் நம்முடைய தலைமுடியை கருமையாக மாற்றுவதற்கும் உதவக்கூடிய ஒரு பொருள்தான் கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை நாம் வெந்தயத்துடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது சளி பிடிக்கும் பிரச்சினை ஏற்படாது. முடி உதிர்தல் குறையும். முடி கருமையாக வளர ஆரம்பிக்கும். ஆரோக்கியமாக பட்டு போன்று நிலிரவும் தொடங்கும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் இரண்டு முறைகளில் செய்யலாம். முதல் நாள் இரவே வெந்தயத்தையும் கருஞ்சீரகத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்து நன்றாக அரைத்து அதை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். அல்லது அப்பொழுது கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் எடுத்து மிக்ஸி ஜாரில் பொடி செய்து விட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றி 10 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு மேலே தேங்கி இருக்கும். அந்த தண்ணீரை மட்டும் எடுத்து உச்சம் தலையில் இருந்து நுனி வரை நன்றாக தடவி 15 நிமிடம் மட்டும் வைத்திருந்து பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்த விட வேண்டும். இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழி முறையை நாம் பின்பற்றுவதன் மூலம் வாதத்திற்கு ஒருமுறை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியும்.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு அழகு குறிப்பு

மிகவும் எளிமையான இந்த வெந்தயம் கருஞ்சீரகத்தை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய தலைமுடியின் ஆரோக்கியம் என்பது சிறப்பாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -