தலைமுடி உதிர்வு இளநரை பொடுகு என அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக அதுவும் வாரம் ஒரு முறை மட்டும் இதை செய்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முடி சும்மா ஜெட் வேகத்தில் வளரும்.

- Advertisement -

இன்றைய காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் இரு பாலருக்கும் இந்த முடி உதிர்வு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பெல்லாம் இது ஒன்றும் பெரிய பூதகாரமான விசயமே இல்லை. இன்றைய காலத்தில் இளம் வயது பிள்ளைகளுக்கு கூட தலையில் வழுக்கை, இளநரை வந்து பார்ப்பதற்கே வயதானவர்கள் போல தோற்றம் தோன்றுகிறது. இது அவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை எற்படுத்தி விடுகிறது. இனி இதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வை இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் தலைமுடி உதிர்வதற்கும், தலையில் பொடுகு , புண் , இளநரை, போன்ற அனைத்து தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த சின்ன வெங்காயம் இருந்தாலே போதும். இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பரானது தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வுவாக உள்ளது.

- Advertisement -

முடி உதிர்வை தடுக்க சின்ன வெங்காய பேக்:
இதற்கு பத்திலிருந்து பதினைந்து சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளுங்கள். இதை தோலுரித்து நன்றாக அரைத்து சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு அரைத்த இந்த சாறை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்த பின் அடிமுடி வரையிலும் நன்றாக தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் தலையில் மசாஜ் செய்து விடுங்கள். மசாஜை செய்த பின் ஏதாவது ஒரு மைல்டான ஷாம்பு, அல்லது சீயக்காய் உபயோகித்து தலை முடியை நன்றாக அலசி விடுங்கள்.

சின்ன வெங்காயம் குளிர்ச்சியானது உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து தேங்காய் எண்ணையில் சேர்த்து அதை காய்ச்சி வைத்து வடிகட்டி அந்த எண்ணையை தடவி கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம் சேர்த்து காய்ச்சும் போது இத்துடன் கொஞ்சம் புதினா இலை சாறு , எலுமிச்சை சாறு இவை இரண்டும் கலந்து தேய்க்கலாம். இவை அனைத்துமே தலைமுடி நன்றாக வளர உதவும்.

- Advertisement -

சின்ன வெங்காயத்தை தொடர்ந்து தேய்த்து வர நிச்சயம் உங்கள் தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அது மட்டும் இன்றி இளநரையும் மறையும். இந்த வெங்காயத்தை அப்படியே அரைத்து தலையில் தேய்த்தால் திட்டு திட்டாக இருக்கும், இதனால் காய்ந்த பின் அது தலையில் ஒட்டி கொண்டு எடுப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். இதை அரைத்து சாறு எடுத்த பின் தலையில் தடவினால் சுத்தம் செய்ய எளிமையாக இருக்கும்.  இதை கட்டாயம் வாரம் ஒருமுறை தேய்த்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் மருக்கள் உதிர இருந்த இடம் தெரியாமல் போக ரொம்ப ஈசியாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

தலை முடி வளர இது போன்று செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்கலாம். இதற்கென கெமிக்கல் கலந்த பொருட்களை தலையில் தேய்த்து உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம்.

- Advertisement -