உங்கள் தலை முடி கட்டுக்கடங்காமல் காடு போல வளர டானிக் தயார் செய்யும் முறை

hair tonic long hair
- Advertisement -

கைக்கு அடங்காத முடியை பெற வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் ஆசைப்படுவார்கள். முடி வளர்ந்தாலும் அது கொட்டாமல் இருந்தால்தான் அடர்த்தியாக இருக்கும். முடி கொட்டாமல் இருப்பதற்காக நாம் பல எண்ணெய்களை உபயோகப்படுத்துவோம். அதே சமயம் பல ஹேர் பேக்குகளையும் உபயோகப்படுத்துவோம். பல விதமான ஷாம்புகளையும் உபயோகப்படுத்துவோம். இவை அனைத்திலும் முடி உதிர்வது நிற்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் எந்த டானிக்கை உங்கள் முடிக்கு கொடுத்தால் முடி நன்றாக வளரும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடி வழுவிழந்து இருந்தால் முடி உதிர்தல் அதிகரிக்கும். நமக்கு வளரக்கூடிய முடி எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நமக்கு அடர்த்தியான முடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வலுவான முடியை பெறுவதற்கு நாம் ஒரு டானிக்கை நம் முடிக்கு தர வேண்டும். இந்த டானிக்கை நம் முடிக்கு எந்த அளவுக்கு நாம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நம் முடி மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறலாம்.

- Advertisement -

இந்த டானிக்கை நாம் தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் போதும். ஒன்று சோற்றுக்கற்றாழை, இரண்டாவது தேங்காய் எண்ணெய், மூன்றாவது விட்டமின் இ கேப்சூல். இப்பொழுது கற்றாழையில் ஒரு மடலை எடுத்து நறுக்க வேண்டும். முடிந்த அளவு இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய கற்றாழையை எடுத்துக் கொண்டால் அதன் மகத்துவம் இன்னும் அதிகமாக இருக்கும். இயலாதவர்கள் கடையில் விற்கும் ஜெல்லை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

கற்றாழை மடலை நறுக்கி அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் முழுமையாக வெளியேறிய பிறகு அதை நன்றாக கழுவி அதன் மேல் இருக்கும் தோல் அனைத்தையும் நீக்கி உள்ளிருக்கும் கற்றாழை சோற்றை தனியாக ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கற்றாழையை ஒரு மிக்ஸி ஜாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் நாம் இரண்டு ஸ்பூன் அளவு தலையில் தேய்க்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் அது எதுவாக இருந்தாலும் அதை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதனுடன் நான்கு விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் எண்ணையை சேர்க்க வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கூல் போல அரைத்துக் கொள்ள வேண்டும். நம் தலைமுடிக்கு தேவையான டானிக் தயாராகிவிட்டது. இதை நாம் தினமும் இரண்டு முறை நம் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதில் முடிக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் இருப்பதால் முடியின் வேர்க்கால்கள் மிகவும் உறுதியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு கருப்பாக இருப்பவர்களையும், 30 நாட்களில் வெள்ளையாக மாற்ற இந்த 1 பொருள் போதும். நீங்க ஆளே அடையாளம் தெரியாம அப்படியே தலைகீழா மாறிடுவீங்க.

இவ்வாறு நாம் செய்வதால் நம் முடியின் வேர்க்கால்கள் வலுப்பெற்று, முடி உதிர்தல் குறைவதோடு முடி மிகவும் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

- Advertisement -