வளராத முடியை வளர வைக்கும் ஹேர் டானிக்

hair tonic
- Advertisement -

பலரும் தங்களுடைய தலைமுடியில் ஏற்படக்கூடிய பிரச்சினையை நினைத்து கவலைப்படுவது உண்டு. அதிலும் மிகவும் குறிப்பாக வெள்ளை முடி வந்துவிட்டாலோ அல்லது முடி உதிர்தல் அதிகமாகி கொண்டே சென்றாலோ கவலைப்படுவார்கள் இவ்வாறு கவலைப்படுவதன் மூலம் மேற்கொண்ட அதிக அளவில் வெள்ளை முடியும் முடி உதிர்தலும் ஏற்படும் என்பதால் முதலில் கவலைப்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் தலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கி வயதான பிறகும் கருமையான முடியை பெறுவதற்கும் முடி உதிர்களை நிறுத்தி அடர்த்தியான முடியை வளரச் செய்வதற்கும் உதவக்கூடிய ஒரு ஹேர் டானிக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சத்துக் ஒருவருக்கு சத்துக் குறைபாடு ஏற்பட்டு விட்டால் அந்த சத்தை உணவுப் பொருட்களின் வாயிலாக பெற வேண்டும் அப்படி உணவு பொருட்களின் வாயிலாக பெற முடியாத பட்சத்தில் மருந்து கடைகளில் இருக்கக்கூடிய சத்து மாத்திரைகளையும் டானிகையும் சாப்பிடுவோம் அதேபோல்தான் நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு ஆரோக்கியமான பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதோடு தலைமுடிக்கு தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்த டானிக்கையும் நாம் பயன்படுத்தும் பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும்

- Advertisement -

இந்த டானிக்கை டானிக்கை தயார் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு 200ml அளவிற்கு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள் பிறகு 15 செம்பருத்தி இலைகளை சுத்தமாக கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள் செம்பருத்தி இலைகள் கிடைக்காத பட்சத்தில் செம்பருத்தி பூவையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இரண்டு ஸ்பூன் ஆளி விதைகள், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், 15 கருவேப்பிலை குச்சிகளை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து வரும் பொழுது ஒரு ஸ்பூன் காபித்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். காபித்தூளானது முடியின் வளர்ச்சிக்கும் வெள்ளை முடியை கருமையாக மாற்றவும் உதவக்கூடிய ஒரு பொருளாக அமைந்துள்ளது. நன்கு கொதித்து தண்ணீர் கருமையாக மாற வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். சிறிது நேரம் சூடு ஆறிய பின்பு அந்த தண்ணீரை நாம் தொட்டு பார்க்கும் பொழுது ஒரு ஜெல் போன்ற பதத்திற்கு வந்திருக்கும். இதுதான் நம்முடைய ஹேர் டானிக்.

- Advertisement -

அந்த ஜெல்லை நம்முடைய தலைமுடியில் 15 நிமிடம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து ஒரு கிண்ணத்தில் சோற்றுக் கற்றாழை உடைய ஜெல்லை ஒரு ஸ்பூன் வரும் அளவிற்கு எடுத்து அதனுடைய தலைக்க உபயோகப்படுத்தும் ஷாம்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை பயன்படுத்தி உங்களுடைய தலையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இந்த ஹேர் டானிக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நம்முடைய தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்யக்கூடிய பொருட்களாகவும் அதே சமயம் வெள்ளை முடியை கருமையாக மாற்ற உதவக்கூடிய பொருட்களாகவும் திகழ்கிறது. மேலும் ஷாம்புவை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து நாம் தலைக்கு தேய்க்கும் பொழுது கண்டிஷனர் எதுவுமே உபயோகப்படுத்தாமல் மிருதுவான மென்மையான கூந்தலை பெறவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: வேப்பிலை, கருவேப்பிலை ஹேர் பேக்

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி ஹேர் டானிக்கை தயார் செய்வது. சோற்றுக்கற்றாழையுடன் ஷாம்பூவை பயன்படுத்தி தைப்பதன் மூலம் ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும்.

- Advertisement -