உங்களின் வேலை, தொழில்களில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்க இதை துதியுங்கள்

hanuman

மனித வாழ்க்கை என்பது அன்றாடம் ஒவ்வொரு விதமான அனுபவங்களை தரவல்லது. பெரும்பாலான நபர்களின் வாழ்க்கை வேலை, குடும்பம் போன்றவற்றை மையப்படுத்தியே நகர்கிறது. இந்த இரண்டிலும் பிரச்சனை ஏற்படுகிற போது நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவரும், ஸ்ரீ ராமாதூதராகிய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணை உள்ளம் கொண்டவர். அவரின் அனுமன் பஞ்சரத்ன மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Hanuman

அனுமன் பஞ்சரத்ன மந்திரம்

வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாஸ்ரு
புலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம்
வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

ஸ்ரீ ராமரின் தூதனாகிய அனுமனுக்குரிய பஞ்சரத்ன மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் ஸ்ரீராமர் அல்லது அனுமனை மனதில் நினைத்து 27 முறை துதித்து வர உங்களுக்கு பல நல்ல பலன்கள் ஏற்படும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் வேலை, தொழில் புரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் தடை, தாமதங்கள் இன்றி நிச்சய வெற்றி பெறும். திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகள் சுமூகமாக தீரும்.

hanuman

- Advertisement -

“எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்” என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ராமாயணத்தில் திருமாலின் அம்சமாக இருந்த ஸ்ரீராமருக்கு எந்நேரமும் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தந்து சேவையாற்றியவர் அனுமன் எனப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர். அவரின் இம்மந்திரம் துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:
சொத்து பிரச்சனை தீர மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview
Here we have Hanuman pancharatnam mantra in Tamil. It is also called as Hanuman mantras in Tamil or Anjaneyar mantras in Tamil or Kudumba prachanaigal theera in Tamil or Hanuman manthirangal in Tamil.