கடன் மேல் கடன் சுமை உங்களை கடுமையாக வாட்டி வதைக்கின்றதா? கடுகு எண்ணெயில் இந்த தீபத்தை ஏற்றினால் 9 வாரத்தில் கடன் சுமை கண்ணுக்குத் தெரியாமல் காணாமலே போகும்.

hanuman

ஒருமுறை வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு மீண்டும் கடனை வாங்குவோம். மீண்டும் இரண்டாவது முறை வாங்கிய கடனை அடைப்பதற்கு, அதற்கான வட்டியை கட்டுவதற்கு மீண்டும் மீண்டும் கடனை வாங்கும் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இப்படியாக நம் தலையை அடமானம் வைத்தாலும் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாத அளவிற்கு, கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றதா? உங்களுக்கான ஒரு எளிமையான தீர்வை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலருக்கு சில பரிகாரங்கள் உடனே பலன் அளிக்கும். சிலருக்கு சில பரிகாரங்கள் பலனளிக்க சிறிது காலம் எடுக்கும்.

hanuman-seetha

ஆனால் எல்லோருக்கும் பலன் அளிக்கக்கூடிய வகையில் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரிகாரம் என்றதும் மந்திர தந்திரங்கள் எல்லாம் கிடையாது. முழு நம்பிக்கையோடு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யப் போகின்றோம். வெற்றியைத் தரக்கூடிய, வெற்றியை தனக்கு மட்டுமே சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கும் அனுமன் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை, நீங்க கடன் பிரச்சனை போக, வருமானம் அதிகரிக்க ஹனுமன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. எப்படிப்பட்ட தோல்வியில் இருப்பவர்களையும், துயரத்தில் இருப்பவர்களையும் தூக்கி நிறுத்தக்கூடிய சக்தி அனுமனுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. உங்கள் வீட்டின் அருகில், அனுமன் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அனுமனது சன்னதிக்கு முன்பாக வியாழக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். முதலில் காம்பும் நுனியும் சுத்தமாக இருக்கும் மூன்று வெற்றிலைகளை வாங்கிக் கொள்ளவேண்டும். அதை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைத்து மூன்று வெற்றிகளை அடக்கிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு இரண்டு மண் அகல் தீபங்களை அதன் மேல் வைத்து, கடுகு எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, அந்த எண்ணெயில் இரண்டு கிராம்புகளை போட்டு தீபம் ஏற்றி, அனுமன் வழிபாடு செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட துயரத்திற்கும் விரைவான தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வெற்றியை நமக்கு தரக்கூடிய வெற்றிலையின் மேல், கிராம்பு போட்ட தீபத்தை ஏற்றும்போது நமக்கு மஹாலக்ஷ்மியின் அருட்கடாட்சம் கிடைத்து நம்மை பிடித்த பீடையானது, நம்மை விட்டு நீங்கி, நமக்கு இருக்கக்கூடிய கடன் சுமை படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமை செய்து வாருங்கள்.

hanuman

முழு நம்பிக்கையோடு செய்து அனுமனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நிச்சயம் உங்களது கடன் பிரச்சனை தீர்வதற்கு சரியான வழியை காட்டுவார் என்பதில் துளி கூட சந்தேகமே கிடையாது. இந்த வழிபாட்டோடு சேர்ந்து உங்கள் கடனை நீங்கள் அடைப்பதற்கு என்ன முயற்சிகளை செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மணி நேரத்தில் இப்படி விளக்கேற்றினால் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றிய பலன் கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.