ஏழரைச் சனி, ராகு கேது திசை, சனி திசை, இப்படி கிரகங்களினால் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா? இனி கவலை வேண்டாம். அனுமனை நினைத்து இந்த பூஜையை செய்தால் வெற்றி நிச்சயம்.

hanuman

ஜாதக கட்டத்தில் ராகு பகவானால் பிரச்சனை, சனி பகவானால் பிரச்சனை, கேது பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. கஷ்டங்கள் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அனுமன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் தான். அனுமனையும் விநாயகரையும் தினம்தோறும் மனமுருகி தொடர்ந்து வழிபட்டு வந்தாலே கிரகங்களினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். கிரகங்கள் கொடுக்கக்கூடிய பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் அந்த பிரச்சனையிலும் ஒரு பாதுகாப்பு வட்டத்தை நமக்கு ஏற்படுத்தி தருபவர்கள் நம் வணங்கக்கூடிய கடவுள்கள் தான்.

hanuman-heart

இன்று சக்தி வாய்ந்த ஒரு அனுமன் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் சரி, அது தீர வேண்டுமென்று இந்த பூஜையை உங்கள் வீட்டில் தொடங்குங்கள். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்து முடிப்பதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்வதற்கு கட்டாயமாக வீட்டில் ஹனுமனின் திருவுருவப்படம் இருக்க வேண்டும். அந்த ஹனுமன் வாலுடன் ஒரு மணி கட்டி இருப்பது போல, ஒரு படத்தை வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. (பெண்களால் பூஜை செய்ய முடியாத 5 நாட்களில், உங்கள் வீட்டில் இருக்கும் கணவரும் உங்கள் குழந்தைகள் உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற சொந்தபந்தங்கள் இந்த பூஜையை செய்யலாம். தவறு கிடையாது.)

hanuman

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு இந்த பூஜையை செய்யுங்கள். தினமும் தலைக்கு குளிக்க முடியாதவர்கள் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில் தலைக்கு குளிப்பதை தவிர்த்துவிட்டு மேல் மட்டும் குளித்து விட்டு, சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து அந்த மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு பூஜையை செய்யலாம்.

- Advertisement -

முதல்நாள் அனுமனின் திருவுருவப்படத்தை சுத்தமாக துடைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். முதலில் அனுமனின் பாதங்கள், இரண்டாவது அனுமனுடைய வால், மூன்றாவது அனுமனுடைய நெற்றி இப்படி பொட்டு வைப்பது சிறப்பு.

butter-vennai

தினமும் அனுமனுக்கு வெண்ணெய் சர்க்கரை சேர்த்த கலவையை நிவேதனமாக வைக்க வேண்டும். ஹனுமனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். அனுமன் முன்னால் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை சொல்லி ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும்.

praying-god1

உங்களுக்கு ஹனுமனின் மந்திரங்கள் தெரிந்தாலும் அதை உச்சரிக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். அதன்பின்பு தூப தீப கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இரண்டாவது நாள் பூஜை வழிபாடுகள் எல்லாம் இதே தான். ஆனால் அனுமன் திருவுருவப் படத்தில் இருக்கும் நெற்றிப் பொட்டையும், பாத பொட்டையும் மட்டும் துடைத்துவிட்டு மீண்டும் புதியதாக 48 நாட்களும் போட்டு வைக்க வேண்டும்.

vadai-malai-hanuman

வாலில் இருக்கும் பொட்டை இந்த 48 நாட்களுக்கு துடைக்காதீர்கள். அதன் மேலேயே சந்தன குங்கும பொட்டை இட்டு வாருங்கள். 48வது நாள் பூஜை நிறைவடையும் போது தான் வாலில் இருக்கும் பொட்டை துடைத்து, சந்தன குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 48வது நாள் அனுமனுக்கு பிடித்த வடை மாலை சாத்தி உங்களுடைய வீட்டிலேயே இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

Hanuman mantra1

நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் 48 நாட்களில் நிறைவேறும். அப்படி நிறைவேறாத பட்சத்தில், உங்களது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்து வர, கூடிய விரைவில் அந்த வேண்டுதலை ஹனுமன் நிறைவேற்றி வைப்பார். கிரகங்களினால் வாழ்க்கையில் வரக்கூடிய தடைகளும் இதன்மூலம் தகர்க்கப்படும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.