எந்த 5 ராசிக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறார்கள்? மகிழ்ச்சியை தொலைத்த ராசிகள் யார்?

happy-sad-astro

12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்க்காரர்களும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை கொண்டு இருப்பார்கள். ஒருவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களுடைய குணாதிசயங்கள் இருக்கும். ஒருசிலர் மகிழ்ச்சியைத் தேடி பயணிப்பார்கள். மேலும் சிலர் அந்த மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு எதற்காக பிறந்திருக்கிறோம்? என்றே தெரியாமல் எதன் பின்னாவது ஓடிக் கொண்டிருப்பார்கள். அத்தகையவர்களில் எந்த 5 ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள்? மகிழ்ச்சியை தொலைப்பவர்கள் எந்த ராசிக்காரர்கள்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியான அணுகுமுறையாக கொண்டு இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதுமே வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து அதிலிருந்து விரைவாகவே வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பது அவ்வளவு முக்கியம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்கள் எல்லா சமயங்களிலும் நேர்மறையான விஷயங்களை வளர்த்துக் கொள்வதில் இவர்கள் மிகவும் புத்திசாலிகள். எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து போகாமல் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை தேடி கண்டுபிடித்து தீர்வையும் கொடுப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் மென்மையான தன்மையை கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு எல்லா நேரமும் சுறுசுறுப்புடன் இருப்பது மிகவும் பிடிக்கும். ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை இவர்கள் விரும்புவதில்லை. பெரும்பாலும் பிரச்சனையிலிருந்து இவர்கள் ஒதுங்கியே இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனையையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஆவேசப்பட்டு உணர்சிகளை வெளியிட மாட்டார்கள். தன்னை சுற்றி எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால் பிரச்சனைகளையும் தவிர்க்கிறார்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள். தனக்கு முழு சுதந்திரமும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற சாகச உணர்வும் இவர்களிடம் இருக்கும். எந்த ஒரு மோசமான சூழ்நிலையை இவர்கள் உணரும் பொழுது அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையை எளிதாக கையாளுவார்கள். யாருடைய பேச்சுக்கும் இவர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள். இதனால் இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்று வித்தியாச உணர்வுடன் இருப்பார்கள். எந்த ஒரு உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் மனதில் போட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு சோகம் வந்தாலும் உடனே வெளிக்காட்டி விடுவார்கள், மகிழ்ச்சி வந்தாலும் அப்படித்தான். எனினும் உணர்வுகளை எப்படி அடக்குவது? என்பது இவர்களுக்கு தெரியும். எதையும் வெளிப்படையாக பேசி விடுவதால் இவர்களுக்கு சோகம் என்பது குறைவுதான். எல்லா இடங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே தங்களை வைத்திருப்பார்கள்.

Rishabam Rasi

மற்ற ராசிக்காரர்கள் குறிப்பாக ரிஷப ராசிக்காரர்கள் உணவு மற்றும் காதல் போன்ற விஷயங்களில் அழகான செயல்முறைகள் கடைபிடிப்பார்கள். இவர்கள் நல்ல விஷயங்களில் எப்பொழுதும் ஈடுபடுவார்கள். இவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும் எனவே இவர்கள் தகுதி இல்லாத ஒன்றை பெறும் பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதே போல மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களை பிஸியாகவே வைத்திருப்பார்கள். எல்லோரையும் விட வாழ்வில் மிகவும் வேகமாக ஓட கூடியவர்கள். மகிழ்ச்சியை விட மற்றவற்றில் இவர்களுடைய கவனம் அதிகமாக இருப்பதால் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது கடினம் தான். இதே போல தான் மற்ற ராசிக்காரர்களும் மகிழ்ச்சியை தொலைத்து தேவையில்லாத மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி கொண்டிருப்பார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ தான் பிறந்திருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால் யாருக்கும் சோகம் என்பதே இருக்காது.