- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வழிபாடு

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வழிபாடு

- Advertisement -

வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை, திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்களும், திருமணம் நடந்தும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்று வருத்தப்படுபவர்களும், தம்பதிகளாக வாழாமல் பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருப்பவர்களும் தங்களுடைய வாழ்க்கையே இழந்த ஒரு சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். அப்படி திருமணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி நல்ல சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை வாழ்வதற்கு நாகருக்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வழிபாடு

பொதுவாகவே திருமணத்தில் தடைகள் ஏற்படுகிறது அல்லது திருமணத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் அதற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர்கள் ராகு கேது தான். இவர்களின் ஆதிக்கத்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பவர்கள் ராகு கேதுவை வழிபாடு செய்ய வேண்டும். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷங்கள் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். எப்பேர்ப்பட்ட திருமண பிரச்சினையாக இருந்தாலும் ராகு கேதுவை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ராகு காலமான காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணிக்குள் அருகில் நாக சொரூபமாக இருக்கக்கூடிய தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். உதாரணமாக நாகாத்தம்மன், கருமாரியம்மன் போன்ற கோவில்களுக்கு செல்லலாம். அப்படி அந்த மாதிரி கோயில்கள் இல்லாத பட்சத்தில் புற்று இருக்கும் இடத்திற்கு கூட சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு நமக்கு இரண்டு பூக்கள் வேண்டும். தாழம்பூ மற்றும் மனோரஞ்சித பூ. இந்த பூக்களை பூ வியாபாரம் செய்பவர்களிடம் கூறி வைத்திருந்தால் அவர்கள் வாங்கி கொடுப்பார்கள். இந்த பூக்களை வாங்கிக் கொண்டு நாகாத்தம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு இந்த பூக்களை கொடுக்க வேண்டும். புற்றாக இருக்கும் பட்சத்தில் அந்த புற்றின் அடியிலும் வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இப்படி வைத்து வழிபாடு செய்துவிட்டு கோவிலையோ அல்லது புற்றையோ 21 முறை வலம் பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை என்ற வீதம் எட்டு வாரங்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்ய திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும், தம்பதிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகளும் முற்றிலும் நீங்கும். இந்த பரிகாரத்தை யார் பிரச்சினையில் இருக்கிறார்களோ அவர்கள் செய்ய வேண்டும். யாருக்கு திருமணம் ஆகவில்லையோ அவர்கள் செய்யலாம். யாருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கிறதோ அவர்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்கி பணவரவு ஏற்பட வெற்றிலை பரிகாரம்

முழுமனதோடு இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி வழிபாடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் விரைவிலேயே திருமணம் நடக்கும், திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்