கல்வியில் மேம்பட, உடல் மற்றும் மனம் தூய்மை பெற ஹயக்ரீவர் மந்திரம்

Hayagriva-mantra-1

இந்த புவியில் மரங்கள் விலங்குங்கள் மனிதர்கள் என்ற மூன்று வகை உயிர்களே அதிகம் வாழ்கின்றன. அதில் மனிதர்களாக பிறந்து வாழ்பவர்களே அவர்கள் வாழ்வில் கல்வியை பயின்று தங்களது அறிவு திறனை மேம்படுத்துக்கொள்கின்றனர். சிலருக்கு ஏதோ ஒரு ஜாதக தோஷத்தால் கல்விளையில் அதிக ஈடுபாடு இல்லமால் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்க கூற வேண்டிய ஹயக்ரீவர் மந்திரம் மந்திரம் இதோ. இம் மந்திரத்தை கூறுவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டும் அல்லாமல் உடல் மற்றும் மனம் தூய்மை அடையும்.

Hayagriva mantra Tamil

ஹயக்ரீவர் மந்திரம்

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

பொது பொருள் :
ஞானதில் சிறந்து விளங்குபவரும், தூய்மையான தேகம் கொண்டவரும், அணைத்து விதமான கல்விக்கும் கலைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீஹயக்ரீவரை நான் வணங்குகிறேன்

இம்மந்திரத்தை பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் ஹயக்ரீவர் படமிருந்தால், அவர் படத்திற்கு முன்பு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி, ஏதேனும் பழம் ஒன்றை நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை கூறி வழிபடலாம். மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதி இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, மலர்களை சூட்டி, சிறிது குதிரைக்கொள்ளை நிவேதனமாக வைத்து வழிபட, காலையில் இருந்து வரும் அணைத்து தடைகளும் விலகும். அதோடு நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற தீய சக்திகளின் பாதிப்பகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
எதிலும் வெற்றி பெற மந்திரம்

- Advertisement -

ஹயக்ரீவர் சிறு குறிப்பு :
“ஹயம்” என்ற வார்த்தை “ஹஸ்வம்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. ஹஸ்வம் அல்லது ஹயம் என்றால் “குதிரையை” குறிக்கும் சொல்லாகும். விலங்குகளில் குதிரை வலிமை மிகுந்த வேகமாக, ஓடக்கூடிய, அதே நேரத்தில் அறிவுக்கூர்மை மிக்க ஒரு விலங்காகும். ஒரு மனிதனின் இயல்பையும், அவனின் குணத்தையும் புரிந்து கொள்ளும் திறன் குதிரைக்கு உண்டு. அதே நேரத்தில் மனிதர்களுக்கு பயணத்திற்கும், அவனது சுமைகளை சுமக்கவும் ஆதி காலத்திலிருந்து பயன்பட்டிருக்கிறது.

Hayagriva mantra Tamil

புராண காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்கள் செய்து வந்த அக்கிரமங்கள் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்து கொள்ள முடியாத தேவர்களும், மனிதர்களும் திருமாலிடம் அவர்களை அழிக்குமாறு வேண்டினர். எனவே அவர்களை அழிப்பதற்கு மனித உடலும், குதிரை தலையும் கொண்ட “ஹயக்ரீவர்” வடிவமெடுத்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்களையும் அழித்தார். இந்த ஹயக்ரீவரை வழிபடுவதால் அனைத்து வகையான நன்மைகளும் ஏற்படும்.

English Overview:
Here we have Lord Hayagriva mantra in Tamil. By chanting this mantra one can get the good education as well as good health and a good heart.