மந்தமான பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் அடையவும், உங்கள் வீட்டில் செல்வ நிலை மாறி சுபிட்சமாக இருக்கவும், இரண்டுக்கும் சேர்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னாலே போதும்.

hayagreevar
- Advertisement -

பிள்ளைகளை நாம் என்ன தான் படிப்படி என்று கட்டாயப்படுத்தினாலும் அவர்களாக்கே நாம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் தான் அவர்கள் படித்து முன்னேற முடியும். அப்படி படிப்பிலே ஆர்வமில்லாமல் மந்தமாக இருக்கும் பிள்ளைகள் தங்களின் படிப்பில் முன்னேற்றம் அடையவும், அதே நேரத்தில் பிள்ளைகளுக்காக இந்த வேண்டுதலை, வைத்து தங்களின் வாழ்க்கை நல்ல நிலையை அடையவும் , இந்த ஒரே ஒரு மந்திரத்தை சொல்லி ஹயக்ரீவரை வழிபட்டால்மட்டும் போதும். பொதுவாக செல்வம் இருக்கும் இடத்தில் படிப்பு இருக்காது, படிப்பு இருக்கும் இடத்தில் லட்சுமி இருக்காது. அதாவது கல்வியும் செல்வமும் எப்போதும் ஒன்றாக இருக்காது என கூறுவார்கள். எனவே, கல்விக்கு ஒரு தெய்வத்தையும், செல்வத்திற்காக தெய்வத்தையும் வழிபடுவோம். ஆனால் இந்த இரண்டையும் சேர்த்து தருபவர் ஹயக்ரீவர். இவரை எப்படி வணங்க வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் இவர் எப்படி இரண்டுக்கும் பொதுவானவர் என்று சற்று சுருக்கமாக பார்ப்போம். மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் இந்த உலகத்தையே தான் ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போது படைக்கும் தொழில் தான் எல்லோரிடத்திலும் முதன்மையான தொழில் அதை நாம் எடுத்துக் கொண்டால் அனைவரும் நம்மை தான் வணங்குவார்கள், என்று முடிவு செய்து படைக்கும் தொழிலுக்கு அதிபதியான பிரம்மாவின் வேதத்தை எடுத்து கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டனர். இதனால் பிரம்மா வேதத்தை மீட்டுத் தந்து தன்னை காக்கும்படி விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்.

- Advertisement -

பிரம்மனின் வேதத்தை எடுத்துச் சென்ற இரு அரக்கர்களும் குதிரை முகத்தை உடையவர்கள். எனவே அவரும் குதிரை முகத்துடன் சென்று அவர்களை அழித்து வேதத்தை கொண்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார். விஷ்ணுவின் இந்த அவதாரம் தான் ஹயக்ரீவர். அந்த வேளையில் அவர் கொண்ட கோவத்தை தணிக்க லக்ஷ்மி தாயார் ஹயக்ரீவர் மடியில் அமர்ந்து சாந்தியடைய செய்து, ஞானத்திற்காக இவரை வணங்குபவர்களுக்கு தானும் செல்வத்தை வணங்கி ஆசிர்வதிப்பதாக இப்படி காட்சி தருகிறார்கள். இதுவே ஹயக்ரீவர் வரலாறு புராணங்கள் கூறுகிறது.

இந்த பூஜைக்கு பெளர்ணமி உகந்த நாள். ஹயக்ரீவர், லக்ஷ்மி தாயார் படம் இருந்தால் நல்லது, இல்லை என்றால் பெருமாள் படம் இருந்தாலும் போதும். பெருமாள் படத்திற்கு பௌர்ணமி அன்று ஏலக்காய் மாலை, அல்லது துளசி மலை, போட்டு நன்கு காய்ச்சிய பாலில் சிறிது ஏலக்காய் போட்டு நெய் வேத்தியம் ஹயக்ரீவர் மந்திரத்தை குழந்தைகளை சொல்ல சொல்லி, வழிபாடு செய்த பின் நெய் வேத்தியம் செய்த பாலை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

- Advertisement -

ஹயக்ரீவ மூல மந்திரம்:
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய! போதய

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்
ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

இந்த வழிபாடு மிகவும் எளிமையானது ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது. மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஹயக்ரீவர் பூஜை செய்து நல்ல கல்வி அறிவுடைய பிள்ளைகளுடனும், குறைவில்லா செல்வத்துடமும் வாழுங்கள்.

- Advertisement -