2 கைப்பிடி முருங்கைக்கீரை கிடைத்தால் சூப்பரான கடையல் எளிதாக 10 நிமிஷத்தில் இப்படி கடைந்து பாருங்கள்! அடிக்கடி இதை செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஒரு நோயும் உங்களுக்கு வராது.

murungai-keerai-kadayal
- Advertisement -

முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள, இந்த முருங்கைக் கீரையை அடிக்கடி சமையல் செய்து சாப்பிட்டால், நம் உடலில் பல்வேறு நோய்கள் குணமாகும். 2 கைப்பிடி அளவிற்கு முருங்கைக்கீரை இருந்தால் போதும், சூப்பரான கடையல் பத்து நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம்! அற்புதமான முருங்கைக்கீரை கடையல் எப்படி எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முருங்கைக் கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – 2 கைப்பிடி, துவரம் பருப்பு – 50 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, நல்லெண்ணெய் – அரை ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், பூண்டு – 15 பல், சின்ன வெங்காயம் – 15, வரமிளகாய் – 7, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 1, பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

முருங்கைக்கீரை கடையல் செய்முறை விளக்கம்:
முருங்கைக்கீரை கடையல் செய்வதற்கு முதலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து முழுதாக அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரை எடுத்து அதில் 50 கிராம் அளவிற்கு துவரம்பருப்பு மற்றும் 50 கிராம் அளவிற்கு பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு குக்கிங் ஆயில் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குக்கருக்கு ஏற்ப பருப்பை நன்கு வேகவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் வெந்தயம் மற்றும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் இல்லாத பட்சத்தில் அதற்கு ஏற்ப பெரிய வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கலாம். இவை நன்கு சுருள வதங்கி வரும் பொழுது வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப கிள்ளி சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து மசிய வதக்கி விடுங்கள். பின்னர் பெருங்காயத்தூள் அரை ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

கீரை நன்கு சுருள வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு பூ போல துருவிய தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விட்டுக் கொள்ளுங்கள். பருப்பு அனைத்தும் சேர்ந்து கெட்டியாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு மண்சட்டியில் சேர்த்து நன்கு கடைந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான், ரொம்ப ரொம்ப ருசியாக செய்யக்கூடிய இந்த முருங்கைக்கீரை கடையல், இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -